​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

அதிநவீன புவி கண்காணிப்பு ஜியோ இமேஜிங்-1 (GISAT-1) செயற்கைக்கோள் அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, புவி ஆராய்ச்சி, வானிலை, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்தி...

2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ

வருகிற 2022ம் ஆண்டில் நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டமாக ரோபோவை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். கரூரில் ஜே.சி.ஐ கரூர் டைமண்ட் இளைஞர் பாசறையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது....

விண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்

நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக மனித வடிவ ரோபோவை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய...

இஸ்ரோவின் மருத்துவர்கள் குழுவிற்கு பிரான்சில் பயிற்சி அளிக்க திட்டம்

இஸ்ரோவின் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் உடல்நலத்தை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கு, பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் 4 விண்வெளி வீரர்களுக்கு, ரஷ்யாவில் 11 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், விண்வெளி வீரர்களின் உடல்நலத்தை கண்காணிக்க, மருத்துவர்கள் குழு அமைக்கப்பட...

ஜிசாட்-30 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை திட்டமிட்டபடி விண்ணிற்கு அனுப்பப்பட்டு, புவிசுற்றுவட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் இஸ்ரோ தனது முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியிருக்கிறது. 3,357 கிலோ எடை...

ககன்யான் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இந்த மாதத்தில் பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக...

இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், ஜனவரி 17ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

நடப்பு ஆண்டில் இஸ்ரோ தனது முதல் செயற்கைகோளை வருகிற 17ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது. இதுகுறித்து இஸ்ரோ விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 3,357...

பிரதமர் நரேந்திர மோடியின் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் மகத்தானது - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்த போது, பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியும் ஆரத் தழுவியும் அன்பை செலுத்திய காட்சிகள் இணையத்திலும் ஊடகங்களிலும் வைரலாகப் பரவின. இந்த அணைப்பும் ஆறுதலும் பிரதமரிடமிருந்து பல உயர்ந்த பண்புகளை...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் - இஸ்ரோ தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மொத்தம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திராயன்-3...

இஸ்ரோ மையத்தில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கடைசி கூட்டத்தில் வைரலான புல்லாங்குழல் இசை

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கடைசி கூட்டத்தில், செயற்கைக்கோள் மைய இயக்குநர் ஒருவர் புல்லாங்குழல் வாசித்தது, இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், யூ.ஆர் ராவ் செயற்கைக் கோள் மைய இயக்குநரும், புல்லாங்குழல்...