​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் 5வயது சிறுமி

ஒசூரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி சிலம்பாட்டத்தில் இளம் வயது சாதளையாளர் பட்டத்தை பெற்று உலக சாதனை படைத்துள்ளார். ஒசூரை அடுத்த சப்படி கிராமத்தை சேர்ந்த பவித்ராமன் - அனிதா தம்பதியினரின் ஐந்து வயது மகள் ஸ்வேதாஸ்ரீ சிலம்பாட்டத்தில் பல சாதனைகளை புரிந்து...

அட்டைப் பெட்டிகளை சுமந்து ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் மாணவர்கள்

ஓசூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளியில் இருந்த பழைய அட்டைப் பெட்டிகளை விற்பனைக்காக சுமந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லை நகரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் ஓசூர் - ராயகோடா மாநில...

ஓசூர் அருகே காரைக்கால் விரைவு ரயில் எஞ்சின் தடம் புரண்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரைக்கால் விரைவு ரயில் தடம் புரண்ட நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் தப்பினர். பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் இன்று காலை ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டை ரயில் நிலையத்தை கடந்து...

அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கெலமங்கலத்தில் இருந்து உள்ளுக்குறுகியை நோக்கி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க ஏணியில் சில...

முதல் போக பாசன நீரால் பூத்துக் குலுங்கும் நெற்பயிர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இந்த ஆண்டு முதல்போக பாசனத்தால் நெற்பயிர்கள் அமோகமாக விளைந்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஜூலை 12 முதல் சுழற்சி முறையில் 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்த நீரால் பேரண்டப்பள்ளி,மோரணப்பள்ளி,காமன்தொட்டி,...

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 960 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நந்திமலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 728...

வெங்காய விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை

மருத்துவத்திற்காக விளைவிக்கப்பட்ட வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கவேண்டும் என ஒசூர் பகுதி விவசாயிகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டதையடுத்து, விலையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக,...

ஓசூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூரில், புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலிசார் திடீரென சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த உறுப்பினர் செயலர்...

சீன பிளாஸ்டிக் பூக்களுக்கு தடைவிதிக்குமாறு மலர் விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், சீன பிளாஸ்டிக் பூக்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கக்கோரி, மலர் விவசாயிகள் ஒரு லட்சம் பூக்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோஜா, ஜர்புரா, பிங்க் உள்ளிட்ட ஏராளமான பூக்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி...

கெலவரப்பள்ளிக்கு நீர்வரத்து வினாடிக்கு 720 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 720 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அதே அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தில் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக...