​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

Bigg Boss : வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் படுக்கையைப் பகிர்வதா? பாஜக MLA எதிர்ப்பு

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்வதை ஏற்க முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதி எம்.எல்.ஏ.வான...

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உதவி மொழி இந்தி - கூகுள்நிறுவனம்

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உதவி மொழி இந்தி என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் தேடுதளத்தில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உதவி செயலி பல்வேறு இந்திய மொழிகளை உள்ளடக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி உள்பட 9 இந்திய மொழிகளை உதவி செயலியில் அறிமுகப்படுத்தியதாகவும்...

திமுக போராட்டம் ஒத்திவைப்பு

 இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் நேரில் அழைத்து உறுதி மொழி அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தமிழக...

இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் மூலம் அழித்த திமுகவினர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை கருப்பு பெயிண்ட் மூலம் அழித்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு இந்தியை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதாக கூறி முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ரயில்...

நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் - ரஜினிகாந்த்

நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இந்தியை பொதுவான மொழியாக தமிழகம் மட்டும் அல்லாமல் தென் மாநிலங்கள் எதிலும் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....

இந்தி குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அபத்தமானது-பினராயி விஜயன்

இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரே மொழி இந்தி என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அபத்தமானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை உலகளவில்...

கன்னட அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

இந்தி தினக் கொண்டாட்டங்களை எதிர்த்து கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கர்நாடக ரனதீரா படே மற்றும் பிற கன்னட ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்தி தினம் கொண்டாடப்படுவதை நிறுத்த வேண்டும்...

இந்தி மொழி பல்வேறு அழகான அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

பல்வேறு அம்சங்களை இந்தி மொழி அழகாகக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஏற்றது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி...

அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

அனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14 ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, இந்தி பேசும் மக்களுக்கு மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இந்தி...

அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

நாடு முழுமைக்கும் ஒரே மொழி என இந்தி தான் என  அமித்ஷா கூறியுள்ள கருத்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும்...