​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் பலாத்கார வழக்கில் திரைப்பட பாணியில் நேர்ந்த திருப்பம்

பாலியல் பலாத்கார வழக்கில் திரைப்பட பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கி சாட்சியாக சேர்க்கப்பட வேண்டியவர் குற்றவாளியாக்கப்பட்ட நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குமரன்நகரைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த தம்பதியின்...

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாணவி ராஜேஸ்வரி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான அவரது தேர்வு...

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கப்பட்ட ரூ. 13.23 கோடியை ஒப்படைக்கக் கோரி கனரா வங்கி வழக்கு

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கப்பட்ட 13 கோடியே 23 லட்சம் ரூபாயை ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கனராவங்கி தொடர்ந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இடைத்தரகராக செயல்பட்டதாக கைதானவர்...

ஆர்காடு வீரசாமியின் சகோதரர் நிலத்தின் பட்டா ரத்து நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் ஆர்காடு வீரசாமியின் சகோதரர் நிலத்தின் பட்டா ரத்து நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 1996-ல் சென்னை அண்ணாநகரில் 41 ஆயிரத்து 764 சதுர அடி நிலத்தை யுனைட்டெட் பிரைவரிஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 27 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய...

சதுரங்க வேட்டை 2 பட சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு மாற்றம்

சதுரங்க வேட்டை 2 பட சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த்சாமி, திரிஷாவின் நடிப்பில்,  இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இந்த...

விஷம் கலந்த சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் விஷம் கலந்த சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில், 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 2000- மாவது ஆண்டு கள்ளச்சாராயம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர். உடற்கூறாய்வில்...

சுற்றுச் சூழல் அனுமதி வழங்காவிட்டால் எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு உறுதி

சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காவிட்டால் எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை கோரும் அன்புமணி ராமதாஸ், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் வழக்கு இன்று...

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்களில் சீட் பெல்ட் அணிவதையும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதையும் முழுமையாகவும் முறையாகவும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள்...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த தமிழ் அறிஞர் கி.த.பச்சையப்பன் மாரடைப்பால் காலமானார்

வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த தமிழ் அறிஞர் கி.த.பச்சையப்பன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 85. மகன் தொல்காப்பியனுடன் குடும்ப சிவில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த கி.த.பச்சையப்பனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கி.த.பச்சியப்பன் தமிழ்...

மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் 14 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு

மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியை 7 மாதங்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக...