​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கண்ணான கண்ணே... நம்ம ஊரு பாட்டுக்காரர்

குயிலைப் போன்ற குரல் வளத்தால் இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. திறமையை வளர்த்தால் வாழ்வில் ஏற்றம் உறுதி என்பதற்கு சான்றான இன்னிசை இளைஞரின் வாழ்வு, இதோ இசையாக உங்கள் கண்முன்னே..  இவர் தான்...

மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர்

மயிலாடுதுறை அருகே படிக்கவில்லை என்பதற்காக மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை கீழையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் பவித்ரா. 8 வயதான இவர், இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாத மாற்றுத்திறனாளி. பவித்ரா அப்பகுதியில் உள்ள அரசு...

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதிஉதவியை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு கடந்த 2017ம் ஆண்டு...

இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் தவித்த மாற்றுத் திறனாளி

ஸ்பெயினில் நடந்த ராக் இசை நிகழ்ச்சியை பார்க்கத்துடித்த மாற்றுத் திறனாளி இளைஞரை நண்பர்கள் வீல் சேருடன் தூக்கி கொண்டாடினர். விவைரோ என்ற இடத்தில் ராக் இசைப் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகக் குரல் எழுப்பினர். அப்போது ராக்...

பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கையை நிறுத்தியதற்கு எதிர்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்காத புகாரில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கலந்தாய்வில் பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி உள்ள ஜெயமாதா பொறியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சார்பில்...

கால்களை இழந்த ஆமைக்காக உருவாக்கப்பட்டுள்ள வீல்சேர்

லூசியானாவில், இரண்டு கால்களை இழந்த ஆமைக்காக, பொம்மை காரின் சக்கரங்களை கொண்டு வீல் சேர் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவமனையில் கால்களை இழந்த ஆமை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோ (Pedro) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆமைக்கு முதலில் மருத்துவ...

மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில், 40 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் 40 நாட்களாகியும், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  சென்னை தா.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் தனது தங்கை...

மகளை காப்பாற்ற பிச்சை எடுக்கும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை அவரது வயதான பெற்றோர் பிச்சை எடுத்து காப்பாற்றி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜப்பா - மாதேவம்மாள் தம்பதியினர். இவர்களின் மகள் சுஜாதாவை,...

அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தப்படும் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் 11 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச்...

5 வயது மாற்றுத்திறனாளி மகனிடம் இருந்து பிரித்துவைக்கப்பட்ட பெண் அகதி

அமெரிக்காவில் இந்தியப் பெண் அகதி ஒருவர் தமது 5 வயது மாற்றுத்திறனாளி மகனிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ எல்லை வழியாக தங்கள் நாட்டுக்குள் நுழைந்த அகதிகளிடமிருந்து கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 300 குழந்தைகளை அமெரிக்க அரசு நிர்வாகம் பிரித்தது....