​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளுக்கான மொழிபெயர்ப்பு தவறாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வினாத்தாளில் குளறுபடி...

நீட் தேர்வில் கருணமதிப்பெண் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் CBSE மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்ட 49...

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். நீட் தேர்வில் தமிழாக்கம் செய்யப்பட்ட வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு கருணை...

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்ட 49 கேள்விகளுக்கு மதிப்பெண்...

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற திருப்பு முனை தீர்ப்பினை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் : செங்கோட்டையன்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த திருப்பு முனை தீர்ப்பினை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருக்கிறார். திருச்சியில் செய்தியாளர்களிடம்...

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 2 வாரத்தில் புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளிட்டு மறுகலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.  மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டு, அதற்கான...

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்குக் கருணை மதிப்பெண் கோரிய வழக்கில், இன்று தீர்ப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கக் கோரும் வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்குகிறது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49வினாக்களுக்கு...

நீட் தேர்வு வினாக்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவகாரத்தில் CBSE சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டிப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் தொடுத்த வழக்கில் சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ்வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும்...

மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் தரும் அரசாணை ரத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தொலைதூர அல்லது எளிதில் செல்ல முடியாத கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு...

CBSE 10-ம் வகுப்பு ஆங்கிலத் தாளில் தவறான கேள்வி?

பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆங்கிலத் தாளில் தவறான கேள்விக்கு 2 மதிப்பெண் வழங்குவது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தாள் கேள்வியில் endurance, obstruction மற்றும் motivation ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அருஞ்சொற் பொருளை,...