​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

மதுரை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அரசுப்பேருந்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. வாடிப்பட்டியிலிருந்து சோழவந்தான் சென்ற அந்தப் பேருந்து, மேலக்கால் பிரிவு என்ற முச்சந்தியை கடந்தது. அப்போது செக்கானூரணியில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்...

தெலுங்கானாவில் மலைப்பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 30 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஜாகித்யாலாவிலிருந்து கொண்டகட்டு பகுதியை நோக்கி, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது. கொண்டகட்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம்...

ஓடும் பேருந்தில் குடிபோதையில் பெண்களிடம் அத்துமீறிய ஆயுதப்படைக் காவலர் பணியிடை நீக்கம்

அரியலூர் அருகே ஓடும் பேருந்தில் குடிபோதையில் பெண்களிடம் அத்துமீறிய ஆயுதப்படைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செஞ்சியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தில் ஆயுதப்படைக் காவலரான மணிகண்டன் பயணம் செய்தார். அப்போது குடிபோதையில் இருந்த அவர், பெண் பயணிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது....

படிக்கட்டில் பயணித்த மாணவருக்கு சரமாரி அடி..! அரசு பேருந்து நடத்துனர் ஆவேசம்

அரசு பேருந்து ஒன்றில் சொல்பேச்சு கேட்காமல் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரை, நடத்துனர் ஒருவர் அடித்து உதைத்த சம்பவம்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  நடந்துள்ளது  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து செங்குன்றத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அப்போது, அரசு பள்ளியில் 12...

அரசு பேருந்துகளை நவீனமாக்க கோரி பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்

பயணிகளின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏதுவாக அரசு பேருந்துகளை நவீனமாக்க கோரி பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நடப்பு...

நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை குறுகிய தூரத்துக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறைந்த தூர ஊர்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் இருந்து கோவைக்கு படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்தை அவர் தொடங்கி...

விருதுநகரில் அரசுப் பேருந்தில் பயணித்து மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணித்து மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் மற்றும்...

பேருந்து ஓட்டுநர்களின் மோதலால் பயணிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரசுப் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். பள்ளியாடி பகுதியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வது தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் அஜில் என்பவருக்கும், மினி பேருந்து ஓட்டுநர் அனீசுக்கும்...

தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் நிலையில் புதுச்சேரியிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. முழு அடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் முழுவதுமாக இயக்கப்படவில்லை....