​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"சென்னையில் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு"

பிளாஸ்டிக்கை உண்டதாலும், நாய்கள் கடித்தது போன்ற காரணங்களாலும், கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வனத்துறை அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆளுநர் மாளிகை, சென்னை ஐஐடி உள்ளிட்ட வளாகங்களில் இருந்து, மான்களை வேறு பகுதிகளுக்கு இடமாற்ற தடை...

3,200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 3 டன் கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக மண்டபம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள்...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஏ.வி.வெங்கடாசலம் நியமனம்

இந்திய வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற  அதிகாரி ஏ.வி.வெங்கடாசலம்  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்வு விதிகளுக்கு உட்பட்டு வெங்கடாச்சலம் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு...

நாய்க்கு பயந்து ஊருக்கே ரெஸ்ட் கொடுத்த கரடி..! 8 மணி நேர திக் திக்.!

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடிக்கு பயந்து ஊரே வீட்டை பூட்டிக் கொண்டு அச்சத்தில் உறைந்து கிடக்க , அந்த கரடியோ தெரு நாய்களுக்கு பயந்து 8 மணி நேரமாக மரத்தில் ஏறி பதுங்கி இருந்துவிட்டு, விட்டால் போதும் என்று தப்பி...

இடம் மாறுகிறது லடாக் சூரிய மின்னுற்பத்தி நிலையம்?

லடாக்கில் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம், வனஉயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என கவலை எழுப்பப்பட்டுள்ளதால் அருகில் வேறொரு இடத்திற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து பற்றி ஆகஸ்ட்...

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையின் பின்புறம் உள்ள பன்னவாடி கிராமத்தின் நீர்தேக்கப்பகுதியில் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழக -...

வனப்பகுதிகளிலுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதிகளிலுள்ள தண்ணீர் தொட்டிகளில், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு நிரப்படும் நீரை யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து பருகி செல்கின்றன. ஓசூர் வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள...

பேரிகை வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரியும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சானமாவு, போடூர் ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் கடந்த மாதம் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றன. இந்த...

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாயின. லட்சுமிபுரம் அருகே உள்ள சொர்க்கம் வனப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத்தீயானது பற்றி கொளுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது. இந்த தீயினால் அங்குள்ள...

வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர், உணவு தேடி நெடுஞ்சாலையை கடக்கும் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வறட்சி காரணமாக தண்ணீர், உணவு தேடி யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆசனூர் வனப்பகுதியில் அதிக அளவில் உள்ள மூங்கில் மரங்களின் கிளைகளை ஒடித்து அதன்...