​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது

கோவையில் ஓடும் காரில் தீப்பற்றியதில் 4 பேர் உயிர் தப்பினர். ராசிபுரத்தைச் சேர்ந்த பிஜு பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் கோவை டவுன்ஹால் நோக்கி சென்ற போது கார் என்ஜினில் தீப்பற்றியது. காரில் தீப்பற்றியதும் அதில் இருந்த 4 பேரும் அவசரமாக கீழே...

திருத்தணி அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய...

ஓசூர் அருகே பழைய பொருட்கள் சேமிக்கும் கிடங்கில் தீ விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ,பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.  ஓசூர் வெளிவட்ட சாலையில் சீனிவாசன் என்பவர் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். அங்கு...

புதுச்சேரியில், பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. மங்கலட்சுமி நகர் பகுதியில் வட இந்தியருக்கு சொந்தமான இந்த குடோனில் பொம்மை, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன....

நேற்று தமிழகம் முழுவதும் தீ விபத்து தொடர்பாக 232 அழைப்புகள்..!

தீபாவளி தினமான நேற்று தமிழகம் முழுவதும் தீ விபத்து தொடர்பான 232 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 228 அழைப்புகள் சிறு அளவிலான தீ விபத்துகள் தொடர்பான அழைப்புகள் என்றும் 4 தீ விபத்துகள் சற்று தீவிரமானவை என்றும்...

மர குடோனில் கொளுந்து விட்டு எரிந்த நெருப்பு

மும்பையில் மர குடோனில் பற்றிய நெருப்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூங்கில் கழிகள் எரிந்து சாம்பலாகின. அந்தேரி பகுதியில் நவ்பாடா ((Navpada)) என்ற இடத்தில் மர குடோன் ஒன்று அமைந்துள்ளது. அதில் மூங்கில் கழிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் செவ்வாயன்று எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது....

திருச்சியில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். புத்தூர் அரசு மருத்துவமனை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. குமரன் நகர் ராஜசேகரன் என்பவருக்குச் சொந்தமான இந்த கிடங்கின்...

மும்பை பாந்த்ராவில் உள்ள குடிசைப் பகுதியில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி

மும்பை பாந்த்ராவில் உள்ள குடிசைப் பகுதியில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். மும்பை பாந்த்ரா தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள லால்மதி குடிசைப் பகுதியில் ஒரு வீட்டில் தீப்பற்றியது. காற்று வேகமாக...

கரூர் அருகே டீசலுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியில் தீ

கரூர் மாவட்டம் முத்துச்சோளிபாளையத்தில் டீசலுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியும், 2 இரு சக்கரவாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பைஅடுத்த முத்துச் சோளிபாளையத்தில் பன்னீர்செல்வம் என்பவர் தோட்டத்தில் நிறுத்தியிருந்த டேங்கர் லாரியில் இரண்டு பிரிவுகளில் டீசலும், ஒரு பிரிவில் பெட்ரோலும்...

எடப்பாடி அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரியில் தீப்பற்றி விபத்து

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி மின்சார கம்பியில் உரசியபோது, தீப்பிடித்ததில் முற்றிலும் எரிந்து நாசமானது. பெங்களூருவிலிருந்து பஞ்சுபாரம் ஏற்றிய லாரி, கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே...