​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளது. 31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் கட்டமாகவும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின்...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை 31-ஆம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவை அனுமதி...

பிப்ரவரி முதல் தேதி தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட், 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.  வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில்  தாக்கல் செய்ய...

கறுப்புப்பண விவரங்களை வெளியிட மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு..!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதி அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்தியா, சுவிட்சர்லாந்து நாடுகளிடையே வரி சார்ந்த ஒப்பந்தத்தின்கீழ் தகவல்களை பரிமாறிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி...

வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு மதத்தை குறிப்பிட வேண்டுமா?

வங்கிக் கணக்கு தொடங்கும் போது  விண்ணப்பத்தில் எந்த மதம் என்பதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கும் போது கே.ஒய்.சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தில் மதம்...

2020 பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கலாக வாய்ப்பு

2020ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கலாக வாய்ப்பிருப்பதாக மத்திய நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு 2017ம் ஆண்டு முதல் பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி...

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.4.91 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல்

சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களில் 4 லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணப்புழக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதத்தில் கடந்த...

மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய GST வரி வருவாய்

ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த நவம்பரில் மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் கடந்த செப்டம்பரில் சுமார் 91 ஆயிரம் கோடியாகவும், அக்டோபரில் சுமார் 95 ஆயிரம் கோடியாகவும் இருந்த நிலையில், தற்போது ஒரு...

2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசனை

அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்காக இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஆலோசனைக் கூட்டங்களை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வேலை நாளில் 2020 - 2021 நிதி ஆண்டுக்கான...

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவீதத்தை 8.65 சதவீதமாக உயர்த்தும் திட்டம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவீதத்தை 8.65 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவீதத்தை 8.55 சதவீதத்திலிருந்து, 8.65 சதவீதமாக உயர்த்த, வருங்கால வைப்பு...

நிதி, வங்கித்துறை சார்ந்தவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதி மற்றும் வங்கித்துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்ய...