​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காற்று மாசு விவகாரத்தில் தங்களைக் குறை கூறுவது நியாயமில்லை - ஹரியானா மாநில அரசு

காற்று மாசு விவகாரத்தில் தங்களைக் குறை கூறுவது நியாயமில்லை என்று டெல்லி அரசை, ஹரியானா மாநில அரசு சாடியுள்ளது. அண்டை மாநிலங்கள், விவசாயக் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுவுக்கு காரணம் என்று டெல்லி அரசு குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள ஹரியானா...

அறுவடைக்குப் பின் வைக்கோலை எரிப்பதை யாராலும் தடுக்க முடியாது: பஞ்சாப் விவசாயிகள்

வைக்கோலைத் தீவைத்து எரிப்பதை யாராலும் தடுக்க முடியாது எனப் பஞ்சாப் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலப் பகுதிகளில் விவசாயிகள் அறுவடைக்குப் பின் வைக்கோலைத் தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்து காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது....

தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பேரணி

தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் ஓசூர் அருகே, ராயக்கோட்டையில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற எழுச்சி பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு உழவர் முன்னணி சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி, ராயக்கோட்டை...

நிலுவைத்தொகை ரூ.30 கோடியை வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கைகளில் கரும்புகளை ஏந்தியபடி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறுங்குளத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தமிழக...

விவசாய கடன் என்ற பெயரில் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை தண்டனை

விவசாய கடன் என்ற பெயரில் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 47 பேருக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.  2009 - 10-ஆம் ஆண்டுகளில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா திருவண்ணாமலை கிளையில் மேலாளராக பணியாற்றிய கண்ணன், காசிநாதன்...

850 விவசாயிகளின் ரூ 5.50 கோடி பயிர்க்கடன்களை தீர்க்கிறார் அமிதாப் பச்சன்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 850 விவசாயிகளின் பயிர்க்கடன்களை செலுத்துவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். சுமார் ஐந்தரை கோடி ரூபாய் நிதியை இதற்காக அமிதாப் பச்சன் ஒதுக்கியுள்ளார். விவசாயிகள் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலமான சூழலை மாற்ற மிகுந்த வறுமையில்...

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சொந்த பயன்பாட்டிற்காக 80 ஏரிகளில் இருந்து மணல் எடுக்க புதுச்சேரி அரசு அனுமதி

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக 80 ஏரிகளில் இருந்து மணல் எடுக்க, புதுச்சேரி அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதுச்சேரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 84 ஏரிகள் உள்ளன. அவற்றில் செலவின்றி வண்டல் மண் அள்ளவும், வருவாயத்துறைக்கு போதிய...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், புதினா கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், புதினா கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. புதினா சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு பிடிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு ஏக்கரில் 80 மூட்டைகள் அளவிற்கு...

ஓசூரில் பால் பண்ணையில் நிலுவைத் தொகையை கேட்டு விவசாயிகள் முற்றுகை

ஓசூர் அருகே உள்ள முதுகானப்பள்ளியில் கொள்முதல் செய்த பாலுக்கான நிலுவைத் தொகையை தரக்கோரி விவசாயிகள் பால் பண்ணையை முற்றுகையிட்டனர். தினமும் 600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் விவசாயிகள் பலர் இந்த பால்பண்ணையை நம்பி கால்நடைகளை வளர்த்து வந்தனர். இந்த...

விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே செலுத்துவது நல்லது - வேளாண்துறை முதன்மைச் செயலாளர்

விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30 வரை காலம் தாழ்த்தாமல், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்துமாறு வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ககன்தீப்...