​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு, 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவை 4நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மிக முதன்மையானவர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேல் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்....

இந்திய கிரிக்கெட் அணி வீர ர் அம்பத்தி ராயுடு பந்து வீசத் தடை

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி வீரரான அம்பதி ராயுடு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் பந்து வீசினார். அவரது பந்து...

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அமீரகம் சென்றார் ராகுல்காந்தி

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும் என்றும், இதற்கான அறிவிப்பு  தேர்தல் அறிக்கையில் இடம்...

துபாய் விமானத்தில் பயணி ஆடைகளை களைந்த விவகாரம் , முதலாளியின் கொடுமையே காரணம் எனத் தகவல்

துபாயில் இருந்து லக்னோ வந்த விமானத்தில் பயணி ஆடைகளை களைந்ததற்கு, அவரது பாகிஸ்தானைச் சேர்ந்த முதலாளியின் கொடுமையே காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியா விமானத்தில் சுரேந்திரா என்பவர் நடுவானில் திடீரென ஆடைகளைக் களைந்துவிட்டு நடமாடத் தொடங்கியதால் சக பயணிகள்...

வீட்டை விட்டு வெளியேறி மீட்கப்பட்ட இளவரசி

வீட்டை விட்டு வெளியேறி மீட்கப்பட்டதில் இருந்து ஐக்கிய அரபு அமீரக இளவரசி ஒருவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக ஐ.நா.வின். மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைவர் மேரி ராபின்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச்சில் குடும்பத்தினர் தம் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளை...

மென்பொருள் நிறுவனத்திற்கு சொந்தக்காரனான 13 வயது சிறுவன்

கேரளாவைச் சேர்ந்த 13 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன், துபாயில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளான். கேரள மாநிலம் திருவில்லா கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், ஐந்து வயதில் பெற்றோருடன் துபாய் சென்றான். கணினியை கற்றறிந்த அச்சிறுவன் 9 வயதில்...

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட, ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக, விமான நிலைய தனியார் ஊழியர், தங்கத்தை கடத்தி வந்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். துபாயிலிருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம், தங்கம் கடத்தி வரப்படுவதாக, புதன்கிழமை இரவு தகவல்...

முன்னாள் காதலனை கொன்று பிரியாணி சமைத்த பெண்

துபாயில், முன்னாள் காதலனைக் கொலை செய்து உடலைக் கூறு போட்டு பிரியாணி சமைத்த பெண் கைது செய்யப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அய்ன்((Al ain)) நகரைச் சேர்ந்த அந்தப் பெண், தன்னைக் கைவிட்ட காதலனை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு...

கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, கெஜ்ரிவால் குடும்பத்துடன் துபாய் பயணம் மேற்கொண்டிருப்பதாக பா.ஜ.க. குற்றச்சாட்டு

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துபாய்க்கு ரகசிய பயணம் மேற்கொண்டிருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, காற்று மாசுபாட்டால் மக்கள் அவதிப்படும் நிலையில் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன்...

நீரவ் மோடிக்கு சொந்தமாக துபாயில் உள்ள 11 சொத்துகள் பறிமுதல்

துபாயில் நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாத கடிதங்களை மோசடியாகப் பயன்படுத்தி 13 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்த வைர வணிகர் நீரவ் மோடி...