​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் நாய் குரைத்ததால் தப்பியோட்டம்

சென்னை வேளச்சேரியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் நாய் குரைத்ததால் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி நேருநகர் மதியழகன் தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் 4 குடியிருப்புகள் உள்ளன. இன்று அதிகாலை இந்தக் குடியிருப்பின்...

தாய் நாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற நாகப்பாம்பு

ஒடிசாவில் நாகப்பாம்பு ஒன்று தாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒடிசாவின் பத்ரக் ((Bhadrak)) பகுதியில், நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருக்கும் பகுதியில் நுழைந்தது. பாம்பைக் கண்ட அச்சத்தில் குட்டிகளைக் காப்பாற்ற முயன்றும் தாய் நாயால் முடியாமல் போனது. இதைக்...

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு சார்பில் நாய்களுக்கான பூங்கா

இந்தியாவிலேயே முதன்முறையாக ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா திறப்புக்குத் தயாராகியுள்ளது. செல்லப்பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு பயிற்சி அளிக்கவும், புத்துணர்வு தரும் வகையிலும் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி...

சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்

திருச்சியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று கடித்து குதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருச்சி வள்ளுவர் நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், கடந்த 1ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த தெருநாய் ஒன்று, சிறுவனை திடீரென...

கொடைக்கானலில் வளர்ப்பு நாய்கள் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. கொடைக்கால் கென்னல் கிளப் மற்றும் மெட்ராஸ் கென்ஐயின் கிளப் இணைந்து நடத்திய கண்காட்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாய் வளர்ப்போர்...

தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..!

ராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர்....

போலி அரசு ஸ்டிக்கர் ஒட்டிய காரில், வாக்கி டாக்கி, கைவிலங்குடன் வலம் வந்த நபர் கைது

சென்னை அபிராமபுரத்தில் போலி அரசு ஸ்டிக்கர்களை ஒட்டிய காரில், போலீசார் பயன்படுத்தும் வாக்கிடாக்கி, கைவிலங்குடன் வலம் வந்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த 31ஆம் தேதி சென்னை அபிராமபுரம் பகுதியில் கவர்மெண்ட் ஆஃப் இந்தியா, மத்திய சமுகநீதி அமைச்சகம், மனித உரிமை பத்திரிகையாளர்...

புலி, சிங்கம், கழுதைப்புலிக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில், நாய் ஒன்று தனது குட்டிகளுடன், புலிக்குட்டி, சிங்கக்குட்டி, கழுதைப்புலிக்குட்டி ஆகியவற்றையும் பாலூட்டி பராமரித்து வருகிறது. பீஜிங் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் கோல்டன் ரீட்ரீவர் ரக தாய் நாய் இந்த பெருமையைப் பெற்றுள்ளது. 2 செர்பிய புலிக்குட்டிகள்,...

சத்தீஷ்கரில் நாய் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள்

சத்தீஷ்கரில் நாய் ஒன்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சத்தீஷ்கரில், கனமழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. இதேபோல், வெள்ளம் சூழ்ந்த தம்தாரி பகுதியில்,...

விஷம் வைத்துக்கொல்லப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள்

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே 10க்கும் மேற்பட்ட நாட்டுரக வேட்டை நாய்கள் விஷம் வைத்துக்கொல்லப்பட்டுள்ளன. நேற்று இரவு கீழநீலித நல்லூரில் பல்வேறு வீடுகளில் வளர்க்கப்பட்ட கன்னிகோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட வகை நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆய்வில் அவற்றுக்கு விஷம்...