​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தல்... ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருப்பதால் 10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான தேர்தல்...

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர்...

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்...

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில்...

குமரி மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

புயல் எச்சரிக்கை குறித்த அடுத்த அறிவிப்பு வரும் வரை குமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மகா புயலால், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,...

ஜப்பான் குழித்தட்டு முறையில் நடவு

ஜப்பானைப் போன்று குழித்தட்டு முறையில் நெல் நாற்று நடவு செய்யும் முறை, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு நெல் நாற்று நடவு முறையான குழித்தட்டு முறையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் திருக்கடையூரில் அறிமுகம்...

பாறைகள் இருப்பதே ஆழ்துளை அமைக்கும் பணியில் ஏற்படும் தாமதத்திற்கு காரணம்-மாவட்ட ஆட்சியர்

தெர்மாவில் கேமிராவில் நேற்று பார்த்தபோது குழந்தை சுர்ஜித் மயக்கநிலையில் இருந்தான்-ஆட்சியர் பாறைகள் இருப்பதே ஆழ்துளை அமைக்கும் பணியில் ஏற்படும் தாமதத்திற்கு காரணம்-மாவட்ட ஆட்சியர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக நடைபெறும் பணி பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்...

ஆழ்துளை கிணறுகளை மூடுக..! மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..!

மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் தோறும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பு இல்லாத,...

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் பராமரிப்பில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து திறந்த நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் ஆய்வு செய்து மூட மாநகராட்சி, நகராட்சி,...

தொடர் மழையால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கிய தண்ணீர்

மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் குப்பை கூளங்கள் நிறைந்தும், மழைநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசும் இடமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மாறிப்போனதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆட்சியர்...

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலாளர் சண்முகம்...