​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

15000 பேருக்கு பிரியாணி... கந்தூரி விழா பிரம்மாண்டம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற கந்தூரி விழாவில் பிரம்மாண்டமான முறையில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு சுமார் 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.  பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் முதற்கொண்டு பல்வேறு நிலைகளில் பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கந்தூரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், ரசூலு...

பயணிகளை விட செல்போனே முக்கியம்.. தனியார் பேருந்து ஓட்டுநர் அடாவடி..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போனை பார்த்தபடி பேருந்தை இயக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது அவர் தனது செல்போனில் பேஸ்புக் (Facebook)...

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 வயது குழந்தையை கடத்திய நபரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கைது செய்த போலீசார்  குழந்தையை பத்திரமாக மீட்டனர்.  அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜார்அலி. இவருடைய மனைவி மெர்ஜினா, இவர்களுக்கு ரசிதா என்ற 2 வயது பெண்...

வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

வரத்து குறைவு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் ஒருகிலோ மல்லிகைப்பூ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளோடு, நரசிங்கபுரம், சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் மலர் சந்தைக்கு அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன. தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவால்...

சூரியனில் மின்காந்த புயல் ஏற்பட்டு பூமியை கதிர்வீச்சு தாக்கும் அபாயம் - மூத்த விஞ்ஞானி கோபால்சாமி எச்சரிக்கை

சூரியனில் மின்காந்த புயல் ஏற்பட்டு பூமியை பல கோணங்களில் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா விண்வெளி மூத்த விஞ்ஞானி கோபால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்ஜர்வேட்டரி பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் நாசா விஞ்ஞானி கோபால்சாமி கூறுகையில்,...

அரசு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். கணவாய்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவந்த முருகன் என்பவர், அப்பள்ளியில் படித்துவரும் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு  ஆள் இல்லா நேரம்...

அனுமதியின்றி இயங்கிய சூதாட்ட கிளப்புகளில் திடீர் சோதனை - 21 பேர் கைது

திண்டுக்கல் அருகே சூதாட்ட கிளப்புகளில் திடீர் சோதனை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 21 பேரை கைது செய்தார். கொடைரோடு அம்மையநாயக்கனூர் பகுதிகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்தது. எனவே அவற்றை தடுக்க நடவடிக்கை...

2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர். தங்கச்சியம்மாபட்டி அருகே ஒட்டன்சத்திரம்-கோவை 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் இருபுறமும் செல்லும் வாகனங்கள், ஒரே பாதையில் அனுமதிக்கப்பட்டுகின்றன. இந்த நிலையில்...

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக...

லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்ததாக தம்பதி கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்ததாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். விட்டல்நாயக்கன்பட்டியில் லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல்...