​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.400 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை - அதிகாரிகள் ஆய்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம் ம.ஆதனூர்...

தற்கொலைக்கு முயன்ற கணவன், சாதுர்யமாக மீட்ட போலீசார்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மனைவியை சேர்த்து வைக்க கோரி உடலில் நாட்டு வெடிகுண்டு சுற்றியும் பெட்ரோல் ஊற்றியும் தற்கொலைக்கு முயன்ற கணவனை போலீசார் சாதுர்யமாக மீட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில்...

வீடுகளை காணவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

பிரதம மந்திரியின் நகர்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை காணவில்லை என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்மியம்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் புகார் மனு அளித்துள்ளனர். கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரதம...

பிறந்து சில நிமிடமேயான குழந்தையை தவிக்க விட்டுசென்ற இரக்கமற்ற தாய்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனாதையாக கைவிடப்பட்ட பிறந்து சில நிமிடங்களே ஆன அழகான பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீர்தேக்க தொட்டி அருகே பொட்டலம் போன்று சுற்றப்பட்ட ஒரு பை கேட்பாரற்று கிடந்தது....

ஆங்கிலம் கற்க கரடிபாத் முறை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில புலமை பெறுவதற்காக கரடிபாத் என்னும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் நடுநிலைப்பள்ளியில் 181 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மலை ஜாதி மற்றும் இருளர்...

அஜாக்கிரதையாக சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்று சிறுவனை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அஜாக்கிரதையாக சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்று, விபத்தில் சிக்கவிருந்த சிறுவனை, பணியில் இருந்த போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திக் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பண்ருட்டி காவல் நிலையத்தில் ராஜதீபன் என்பவர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பண்ருட்டி...

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ரூ. 7.65 கோடி ஒதுக்கீடு

சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவற்றிலும், கடலூர் மாவட்ட ஆறுகள்,...

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தமது லட்சியம் - இளவேனில் வாலறிவன்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது தான் தமது லட்சியம் என இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251 புள்ளி 7 புள்ளிகள் பெற்று...

முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது வீராணம் ஏரி

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள வீராணம் ஏரிக்கு கல்லணையில் இருந்து அணைக்கரை கீழணை மற்றும் வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 2...

வீராணம் ஏரி மற்றும் கீழணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மற்றும் கீழணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எம்சி சம்பத் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார். கல்லணையில் திறக்கப்படும் காவிரி நீர், அணைக்கரை கீழணை வந்தடைந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரியை சென்றடைகிறது. இந்நிலையில் வீராணம்...