​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரிகளில் நிபா வைரஸ் இல்லை - கேரளக் கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநர் தகவல்

கேரளத்தில் பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் அவற்றில் நிபா வைரஸ் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கி 17பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில்...

கோவில் படிக்கட்டுகளில் வந்த காட்டு யானையை கல்லால் அடித்து விரட்டிய பொதுமக்கள்

கோவை அருகே யானையை கல்லால் அடித்து விரட்டும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தடாகம், அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் சின்னதம்பி என்ற யானை வழிமறித்து நின்றபோது, அப்பகுதி மக்கள் கற்களைவீசி யானையை விரட்டியடித்தனர். அமைதியாக கடந்து செல்லும் யானைகளை இவ்வாறு கல்...

கேரட் விலை சரிவு விவசாயிகள் கவலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காய்கறிச் சந்தையில், வரத்து அதிகரித்ததன் காரணமாக கேரட்டின் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப் படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுவந்து விற்கப்படுகின்றன. கடந்த...

50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் பில் கலெக்டர் கைது

கோவையில் கட்டிடம் கட்டுவதற்கான வரி விதிப்பு செய்து, அதற்கான புத்தகத்தை வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் மாலா என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். உடையாம்பாளையம்  பகுதியை சேர்ந்த சிவகுமார், புதிதாக கட்டிடம் கட்டும் பொருட்டு...

ரூ.2,000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிப்பு, ரூ.1.2 கோடி மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோவை தடாகம் சாலையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், மற்றும் அவருடன் வந்த காரமடையைச்...

சாமியார் வேடத்தில் கொள்ளையன்..! புரட்டி எடுத்த பொதுமக்கள்

கோவை அருகே சாமியார் வேடமிட்டு குறி சொல்வது போல சென்று தனியாக இருந்த பெண் மீது மயக்கபொடி தூவி குழந்தையிடம் வெள்ளிக்கொலுசுகளையும், வீட்டில் இருந்த மிக்சியையும் அபேஸ் செய்த கொள்ளையனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம்...

கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி

கோவையில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் சென்னை கஸ்டம்ஸ் அணியும், பெண்களுக்கான பிரிவில் கேரள மின்சார வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றன. கடந்த 26ம் தேதி துவங்கிய இந்த போட்டியில்...

கோவையில் தடுப்பணை உடைப்பால் வீணாகும் மழைநீர்

கோவை மாவட்டம் சூலூர் அருகே தடுப்பணை உடைப்பால், மழைநீர் வீணாகி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், செங்கத்துறை தடுப்பணையின் ஒருபகுதி உடைந்தது. தடுப்பணையை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த...

கோவை மாநராட்சிப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

கோவை மாநகராட்சிப் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்கொண்டு 11ஆம் வகுப்பு படிக்க இடம் தராமல் வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் தருவதாகக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒப்பணக்கார வீதியில் இயங்கி வரும் மாநகராட்சிப்...

வால்பாறையில் இரண்டு மணிநேரமாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேக்கம் - ஆறுகளில் வெள்ளம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது. முடீஸ், சின்னக் கல்லாறு சின்கோனா, உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் குடியிருப்புகளுக்கு...