​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வால்பாறையில் குட்டியுடன் நடமாடிய சிறுத்தை

கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியுடன் சிறுத்தை நடமாடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. வால்பாறையில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப் படுகிறது. இந்நிலையில், கோ ஆபரேடிவ் காலனியில் ஒரு விடுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சிறுத்தைகள் நடமாடியது பதிவாகியிருந்தன. அதில்,...

பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் ஜகநாதன் மரணம் குறித்து போலீஸ் விசாரணை

கோவையில் மகளிர் விடுதியில் தங்கிய பெண்களை தவறான பாதைக்கு அழைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை பீளமேட்டை சேர்ந்த ஜகநாதன் என்பவரின் தர்சனா மகளிர்...

வெள்ளப்பெருக்கால் ஆற்றில் மூழ்கிய உயர்மட்டப் பாலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான லிங்காபுரத்தையும், காந்தவயலையும், காந்தையாறு கடந்து செல்கிறது. இதன்காரணமாக காந்தவயலில், 20 அடி உயரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது...

கோவையில் விடுதிப் பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்... விடுதியின் உரிமையாளர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!

கோவையில் விடுதியில் தங்கியிருந்த பெண்களை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அதன் உரிமையாளர், நெல்லை அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவை பீளமேட்டை சேர்ந்த ஜகநாதன் என்பவரின் தர்சனா மகளிர் விடுதியில் 200க்கும் மேற்பட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கியிருந்தனர்....

செல்வாம்பதி குளத்தில் இருந்து 25 வயதுடைய பெண் சடலம் மீட்பு

கோயம்புத்தூர் செல்வபுரத்தை அடுத்த பனமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளத்தில், துண்டு துண்டாக வெட்டப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டிருக்கின்றனர். செல்வாம்பதி குளத்தில், 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதப்பதாக, புதனன்று மாலை, செல்வபுரம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல்...

34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல்

இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்...

விடுதியில் தங்கியுள்ள பெண்களை தவறான பாதைக்கு அழைப்பதாக விடுதி காப்பாளர் மற்றும் உரிமையாளர் மீது புகார்

கோவையில் மகளிர் விடுதியில் தங்கிய பெண்களை தவறான பாதைக்கு அழைப்பதாக அளிக்கப்பட்ட புகாரில், விடுதி காப்பாளர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருகிறனர். கோவை பீளமேட்டை சேர்ந்த ஜகநாதன் என்பவரின் தர்சனா...

கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவரை மறித்து மீட்டுச் சென்ற கும்பல்

கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவரைக் கோவையில் சிலர் மறித்து மீட்டுச் சென்றது குறித்துக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் நிதி நிறுவன அதிபர் மகாராஜன் மீது கொச்சியில் பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துத்...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி மற்றும்...

மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பேரிடர் மேலாண் ஒத்திகை நிகழ்ச்சி

கோவை மாவட்டம் துடியலூர் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ரிசர்வ் போலீசாருக்கு மட்டுமின்றி மத்திய மற்றும் மாநில காவல் துறையினருக்கும் பேரிடர் மேலாண்மை பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சியில் ஈடுபட்டு வரும்...