​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட நாளையொட்டி பிரதமர் மோடி,அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து

இந்திய கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட நாளையொட்டி அப்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 1977ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இந்தியக் கடலோர காவல் படை நிறுவப்பட்டதன் 43வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ...

இந்தியா-ஜப்பான் கடலோர காவல் படையினரின் கூட்டுப் பயிற்சி சென்னையில் தொடக்கம்

இந்தியா-ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படைகள் இடையே 5 நாள் ஒத்திகை, சென்னை கடற்பகுதியில் தொடங்கியுள்ளது. சயோக்-கய்ஜின் (Sahyog-kaijin) என்று அந்த ஒத்திகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதில் ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான எசிகோ (Echigo) கப்பலும், இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள்...

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.175 கோடி மதிப்பிலான ஹெராயின்.. நடுக்கடலில் பறிமுதல்

இந்திய கடலோர காவல் படையும், குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவும் சேர்ந்து, பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை நடுக்கடலில் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் கட்ச் கடற்கரை வழியாக, பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்...

போர்பந்தர் அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 6 மீனவர்கள் மீட்பு

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 6 மீனவர்களை, கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீனவர்கள் சென்ற படகில் விரிசல் ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்ததுடன், எஞ்சினிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும், கடலோர காவல் படையின்...

படகில் சென்ற 7 மீனவர்களின் கதி என்ன ?

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் கடலோர பகுதியில் மீனவர்களின் படகு ஒன்றை சேதமான நிலையில் கடலோர காவல்படையினர் மீட்டனர். ஆனால் அதில் சென்ற 7 மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. கடந்த 7ம் தேதி கடலுக்கு சென்றஅந்த ஏழு மீனவர்களும் கரைக்கு...

மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...

மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில்...

விக்ரமாதித்யா கப்பலில் ராஜ்நாத் சிங்...

இந்திய கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் நீடிப்பதாகவும், அதை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் உள்ளதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலில் மேற்கு கடற்படைப்...

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கொகைன் போதைப் பொருள் கடத்தல்

அமெரிக்காவில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடத்தப்பட்ட சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பிடிபட்டது. அமெரிக்காவின் கிழக்கு பசிபிக் கடல் பகுதி வழியாக கொகைன் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அந்நாட்டு கடலோரக் காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடல் பகுதியில்...

கடல் வழியே பயங்கரவாதிகள் இனி ஒருபோதும் ஊடுருவ முடியாது - ராஜ்நாத் சிங்

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவம் இனி ஒருபோதும் நடக்காது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கடலோர காவல்படை விழாவில் பேசிய அவர், இந்திய கடல் சார் பாதுகாப்பில் கடலோர காவல்படை முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்....

சந்தேகப்படும்படியான பொருட்களுடன் வந்த மியான்மர் கப்பல்

சந்தேகப்படும்படியான பாக்கெட்டுகளுடன், கார் நிக்கோபார் தீவு அருகே வந்த மியான்மர் கப்பலை, இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சிறைபிடித்தனர். கடந்த 19ஆம் தேதி அன்று, கார் நிக்கோபார் தீவு அருகே இந்தியக் கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜ்வீர்...