​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகர்கோவில் நகராட்சி மாநராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅறிவிப்பு

 நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் உருமாறுகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,...

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை...

தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது வழக்கு பதிவு

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய அந்த...

காவல் துறையினரின் உடல் மற்றும் மன நலம் பேண நிறைவாழ்வு பயிற்சி திட்டத்தினை துவங்கி வைத்தார் முதலமைச்சர்

காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலனைப் பேண உதவும், நிறைவாழ்வுப் பயிற்சி திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.  காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் காவல்துறையினர் இதில் பங்கேற்றனர்....

கோவாவில் நீடித்துவரும் அரசியல் குழப்பம், துணை முதலமைச்சரை நியமித்து சிக்கலை சமாளிக்க பாஜக முடிவு

கோவாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், துணை முதலமைச்சராக ஒருவரை நியமிக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக கூறி, 16 எம்எல்ஏக்களைக்...

பீஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பீஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக் குறைவால் அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்படுவதாகவும் அவரது உடல் நிலை குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பீஹார் முன்னாள் துணை முதலமைச்சரும்,...

தமிழக அனல்மின் நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மூன்று நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதால் தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துமாறு, பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து...

83 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 83 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே 43 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாலம், சென்னை, திருவள்ளூர்,...

தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், இணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது....

5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

தமிழ்நாட்டில், ஐந்து அரசு மருத்துவக்கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துக்கல்லூரிகளில், கடந்த 5 மாதங்களாகவே முதல்வர் பதவி காலியாக உள்ளதால், அருகாமை...