​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய தடை

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்டுக்காட்டில் சொத்துகள் விற்பனையில் 7 கோடியே 73 லட்சம்...

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறநிலைய துறைக்கு உத்தரவு

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களை, ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்க கோரிய வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அறநிலையத்துறை...

அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட உத்தரவு

தமிழ்நாட்டில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள...

சென்னையில் சாலை, மழைநீர் வடிகால் அமைப்பதில் முறைகேடு என புகார் - ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னையில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்கு 590 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டதில் முறைகேடு என எழுந்த புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த...

மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை - தமிழக அரசு

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இதில் மக்களுக்கு...

நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அங்கம்மாள் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனது மகனான பல் மருத்துவர் முருகானந்தம், பிடதி ஆசிரமத்தில் சேர்ந்து பிராணாசாமி...

மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டுள்ளதாக வழக்கு.. ஜனவரி 6-க்குள் பதிலளிக்க உத்தரவு

மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பதவிகளை நிரப்புவது தொடர்பாக, கடந்த 12ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது....

CAA எதிராக அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடரலாம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பேரணிக்கு எதிரான வழக்கில், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு நீதிமன்றத்தில்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு வாரண்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஒரு சென்ட்டுக்கு, 5,500 ரூபாய்...

'Why This Kolaveri' வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

'ஒய் திஸ் கொலவெறி' பாடல் காப்புரிமையை மீறியதாக கூறப்படுவது தொடர்பாக, சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த பாடலின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையைப் பெற்ற சோனி மியூசிக் நிறுவனம், காப்புரிமையை மீறி, இந்தி...