​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னையில் உள்ள வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலக துணை பதிவாளராக பணியாற்றியவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி...

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு

புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக நேரடியாக பணம் வழங்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 3 லட்சம் ரேஷன் அட்டைத்தாரர்கள் உள்ளனர். இதில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும்...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்  2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்....

மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அமைச்சரவை தீர்மானம் ஜூரோ - மத்திய அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் ஜூரோ தான் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்னை விடுவிக்கக் கோரிய நளினியின் வழக்கில் மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை குறித்த தமிழக...

சசிகலாவின் பினாமி எனக் கூறி, பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்... வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு

சசிகலாவின் பினாமி எனக் கூறி, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக் கோரி கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மனுவில் சென்னை பெரம்பூரில்...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்து வைக்க கோரிக்கை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது. 7 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட...

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம், இணைய தொடருக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் புதிய உத்தரவு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் தலைவி திரைப்படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க கோரிய ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனு மீது இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே...

7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த அதிரடி உத்தரவு

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30ந் தேதிக்குள் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு தமிழக அரசால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக விஷால் தரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன்...

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக சென்னை மத்திய...