​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் மருத்துவர் கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் - சந்திரசேகர ராவ்

தெலங்கானாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவான விசாரணை தொடர்பாக உயர்மட்ட...

தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீட்டில் தலைமைக் காவலர் தற்கொலை

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில், பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்திபேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி பகுதியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு அமைந்துள்ளது. அங்கு வெங்கடேஷ்வரலு என்ற தலைமை...

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள தெலங்கானா முதலமைச்சரின் முகம்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் முகம் மற்றும் அவரது கட்சி சின்னம் ஆகியவை கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. தெலங்கானா மாநிலம் யதாத்ரி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற லஷ்மி நரசிம்மர் கோவிலை புணரமைக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன. தெலங்கானா...

தெலுங்கானாவின் காலேஸ்வரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

தெலுங்கானாவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் , ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  மற்றும் தெலுங்கானா, ஆந்திரா ஆளுநரான...

தெலங்கானா மாநிலம் உதய தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தெலங்கானா மாநிலம் உதய தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2014ம் ஆண்டு, ஜூன் மாதம் 2ம் தேதி ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு, தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் உருவாகி இன்றுடன்...

பாஜகவுக்கு எதிரான அணியில் சந்திரசேகர ராவ் இணைய வாய்ப்பு?

வரும் 23ம் தேதிக்குப் பின்னர் பாஜக அல்லாத மத்திய அரசு அமைக்க, அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லி மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஆம் ஆத்மி -காங்கிரஸ்...

கொல்லை புற வழியில் சந்திரசேகராவுடன் ஸ்டாலின் பேச்சு வார்த்தை - முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

யாரையும் கேட்காமல் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின், தற்போது கொல்லை புற வழியில் சந்திர சேகர ராவ்வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியைக் ஆதரித்து முதலமைச்சர்ர் எடப்பாடி பழனிச்சாமி...

தனது நெடுநாள் கனவு நிறைவேறியது - முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்துள்ள அவர், திருச்சியில் தான் தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து...

தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கன்னியாகுமரி வருகை

தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், தனது குடுமபத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். மக்களவை தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து மூன்றாவது அணிகுறித்து பேசி வருகிறார். இந்நிலையில்...