​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை கண்காணிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது - கிஷன் ரெட்டி

பொதுமக்களின் நன்மைக்காக சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை மத்திய அரசு...

ஐக்கிய அரபு அமீரக பயணிகளுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு உடனடியாக விமான நிலையத்திலேயே விசா வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த விசா 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். சுற்றுலா, இருநாட்டு மக்களிடையே நல்லுறவு மற்றும் வர்த்தக நலன்கள் கருதி...

பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம்

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குருநானக்கின் பிறப்பிடமாக கருதப்படும் நான்கனா சாகிப்புக்கு பேருந்து சேவையை தொடங்கும்படி மத்திய அரசுக்கு சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை இருநாட்டு அரசுகளும் திறந்துவிட்டன. விசா இல்லாமலேயே எல்லை தாண்டி சீக்கியர்...

மத்திய அரசு புள்ளி விவரங்களை மறைக்க முயற்சிப்பதாக ப.சிதம்பரம் புகார்

உண்மையான பொருளாதார புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக இந்தியில் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு விவரம் தொடர்பான உண்மை விவரம்...

அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய...

குடியுரிமை திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வருகிறது மத்திய அரசு

அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த...

மருத்துவர்களை தாக்கினால் சிறை... விரைவில் சட்டத்திருத்தம்

பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்கத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினர்கள்...

வோடஃபோன் ஐடியா திவால் ஆகும் நிலை?

மத்திய அரசு உதவி செய்யத் தவறினால், வோடஃபோன் ஐடியா நிறுவனம் திவால் ஆகும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமமும், இங்கிலாந்தின் வோடஃபோன் குழுமமும் இணைந்த கூட்டு முதலீட்டு நிறுவனம் வோடஃபோன் ஐடியா. இந்நிறுவனத்திற்கு 99 ஆயிரம் கோடி...

காற்று மாசு வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காற்று மாசுபாட்டை குறைக்கும் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் குறித்து, டிசம்பர்.3-க்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உட்பட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்...

1,807 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது மத்திய அரசு

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,807 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெரும் நிதியை பாதுகாப்புக்கு எதிரான அம்சங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை...