​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச் சென்ற போது மாணவ-மாணவிகள் போராட்டம்

சென்னை அடையாறில் பெட்ரிசியன் கலைக் கல்லூரி ஆக்கிரமித்திருக்கும் நிலத்தை மீட்க கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை அடையாறு காந்திநகரில் உள்ளது பெட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி. அந்த கல்லூரியானது மாநகராட்சியின் ஐந்தரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து...

நெடுஞ்சாலையில் பைக் சாகசம்

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையாறு பகுதியில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வாளையாறு பகுதியில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் விடுமுறை நாட்களில் மோட்டார்...

முன்னாள் மேயர் கொலை வழக்கு - செல்போன் அழைப்புகள் ஆய்வு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.   கடந்த 23-ஆம் தேதி உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப் பெண் ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில்...

சுவிக்கி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

சென்னை காசிமேட்டில் கொள்ளையர்கள் இருவர் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியரான துளசிராம், காசிமேடு ஜி.என். செட்டி தெருவில்...

அண்ணா சாலை அருகே நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் செல்போன் பறிப்பு

சென்னை அண்ணா சாலை அருகே நடந்துசென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த திருடன் போலீசாரிடம் வசமாக சிக்கினான். இன்று காலை நடைப் பயிற்சிக்காக சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வழிப்பறி திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடிக்க முயன்றனர். எதிர்திசையில் ரோந்து வாகனத்தில்...

பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக்கோரி, செல்ஃபோன் டவர் மீது ஏறி இளம்பெண் போராட்டம்

தூத்துக்குடி அருகே, பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக்கோரி பெண் ஒருவர் செல்ஃபோன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி வடலிவிளையை சேர்ந்த சண்முகசுந்தரி என்பவர், 5 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்...

பரிவர்த்தனை செயலிகளால் பறிபோகும் பணம்..! எச்சரிக்கும் காவல்துறை..!

பணமில்லா பரிவர்த்தனைகளுக்காக நாம் பயன்படுத்தும் செல்போன் செயலிகள் மூலம் நூதன முறையில் பணம் திருடப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் குவிந்து வருகிறது. செயலிகள் பயன்படுத்த வசதியாக இருப்பதாக கருதி பணத்தை இழந்து விட வேண்டாம் என காவல் துறையினர் எச்சரிக்கின்றனர். நம்...

காணாமல் போன 36 செல்ஃபோன்கள், ஐ.எம்.இ.ஐ எண்கள் மூலம் போலீசார் மீட்பு

சென்னை மயிலாப்பூரில் கடந்த 6 மாதங்களில் காணாமல் போன செல்ஃபோன்களை மீட்ட போலீசார், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மாயமான 36 செல்போன்களை ஐ.எம்.இ.ஐ எண்களைக் கொண்டு மொபைல் நெட்வொர்க் உதவியுடன் கண்டுபிடித்து போலீசார் மீட்டனர். இந்நிலையில் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர்...

காங்கிரஸ் ஆட்சியில் மாதத்திற்கு 9,000 செல்போன் அழைப்புகள் கண்காணிப்பு- தகவல் ஆணையம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மாதத்திற்கு 9 ஆயிரம் செல்போன் அழைப்புகள் இடைமறிக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டில் எந்த ஒரு கணினியையும் கண்காணிக்கும் அதிகாரத்தை சிபிஐ உள்ளிட்ட 10 விசாரணை முகமைகளுக்கு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு...

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டம்

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடிக்குப்பம் அம்பேத்கர் நகரில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ராமன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனக்...