​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய பயிர் கொள்முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 22 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதிய பயிர்...

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நாட்டில் உள்ள அணைகளை கண்காணித்து பாதுகாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசேதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில்...

ஊரக அஞ்சல் அலுவலர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அஞ்சல் அலுவலர்களின் ஊதியத்தை 4மடங்கு உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் ஊரகப் பகுதிகளில் 3லட்சத்து எழுபதாயிரம்பேர் கிளை அஞ்சல் அலுவலர்களாகவும், உதவி அஞ்சல் அலுவலர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இப்போது 2295ரூபாய்...

30 PSLV, 10 GSLV, மார்க் 3 ராக்கெட்களை ஏவ ரூ.10,900 கோடி நிதி

பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்களை ஏவுவதற்காக அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதியை இஸ்ரோவுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் குண்டுப்பையன் என்றும் அழைக்கப்படுவதும் சுமார் 4 டன்...

அலகாபாத்தில் கங்கையாற்றின் குறுக்கே 10கி.மீ.நீளத்தில் புதிய 6வழிப் பாலம் - மத்திய அமைச்சரவை

அலகாபாத்தில் கங்கையாற்றில் 10கிலோமீட்டர் நீளத்துக்குப் புதிய ஆறுவழிப் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் கங்கையாற்றின் குறுக்கே பாப்பமாவு என்னுமிடத்தில் இருவழிப் பாலம் உள்ளது. இதில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் அருகிலேயே புதிதாக 6வழிப்பாலம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. 10கிலோமீட்டர்...

பொருளாதாரக் குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்பவர்களின் சொத்துகள் பறிமுதல் - அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாதக் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற வைர...

10 கோடி குடும்பங்கள் பயனடையும் சுகாதாரத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் பத்து கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் 50 கோடிப் பேர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையின்போது...

மாநில தனிக்கொடிக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவிற்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட தனிக்கொடிக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ணங்களில் உருவாக்கப்பட்ட, இந்த கொடியின் நடுவில் கர்நாடக மாநிலத்தின் சின்னம் இடம் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு தனிக்கொடி அமைத்ததில்...

பண மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் செல்பவர்களின் சொத்துக்களை விரைவாக பறிமுதல் செய்ய வகைசெய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  கடன் பெற்று பணமோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ்...

எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எம்பிக்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்த குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீ உறுதியளித்திருந்தார். அதற்கான ஒப்புதலை நேற்று பிரதமர் தலைமையில் கூடிய...