​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாமி தரிசனம், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டிக் கொண்டதாக பேட்டி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று திருமலைக்குக்குச் சென்ற அவர் இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார். இரவு திருமலையில் தங்கிய எடப்பாடி பழனிசாமி, திருப்பதி...

திருப்பதியில் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு வந்திருக்கும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்துப் பேசினார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள்...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ள தமிழக முதலமைச்சருக்கு ஆந்திர போலீசார், கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருமலையிலுள்ள விருந்தினர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையானை முதலமைச்சர் நாளை தரிசிக்க உள்ள நிலையில், குடும்பத்துடன் இன்று மாலை அவர் திருமலையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்....

நாகரீகத்தோடு நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு முதலமைச்சர் பதில்

பொது வாழ்வுக்கு வந்து விட்டால் நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் எம்எல்ஏ கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது....

நாகர்கோவில் நகராட்சி மாநராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅறிவிப்பு

 நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் உருமாறுகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,...

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நிலவுகிறது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நிலவுவதாகவும், அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து தான் பதவிக்கு வந்தது போல யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லைக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த...

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  உலக வங்கி மேற்பார்வையில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் 4 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை...

நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடைபெறவில்லை : தி.மு.க. குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தாம் பதவியேற்ற பின்னர், பொதுப்பணித்துறையில் ஒரு சிங்கிள் டெண்டர்கூட கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்ததினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி...

வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது - முதலமைச்சர் பழனிச்சாமி

2030-ஆம் ஆண்டு அடைய வேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், செங்கல்பட்டு...

காஞ்சிபுரம் அண்ணா நினைவில்லத்தில் முதலமைச்சர் மரியாதை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் அண்ணா நினைவில்லத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துதினார்.  இதனைத் தொடர்ந்து ரங்கசாமி குளத்தில் அ.தி.மு.க....