​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடு முழுவதும் விரைவில் 8,000 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

நாடு முழுவதும் விரைவில் எட்டாயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளைத் திறக்க சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகளின் தரத்தை மட்டும் சிபிஎஸ்இ நிர்வாகம் கண்காணிக்கும். பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகள் உள்ளிட்ட...

“சாதி மோதலும், ஆடை மாற்றமும்” குறுந்தலைப்பை முழுமையாக நீக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் பாடநூலில் சாதி மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் உள்ளவற்றை நீக்குவதாகக் கூறிய சிபிஎஸ்இ, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில், 168-வது பக்கத்தில் சாதி...

சி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாளில் கடந்த ஆண்டு வரை இடம்பெற்ற 40 கேள்விகள்,...

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்கைக்கும், நீட் தேர்வு எழுதவும் ஆதார் எண் கேட்க கூடாது - உச்சநீதிமன்றம்

அரசியலமைப்புச் சட்டப்படி ஆதார் செல்லும் என்றும், அதேநேரத்தில் பள்ளிச் சேர்க்கைக்கும், செல்போனுக்கு புதிய சிம் அட்டை பெறுவதற்கும், யுஜிசி, நீட், சிபிஎஸ்இ தேர்வு எழுதுவதற்கும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும் ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா...

மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி, பிரெய்ல் பாடத்தைச் சேர்க்கத் CBSE திட்டம்

மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்குச் சைகைமொழி, பிரெய்ல்  ஆகியவற்றைப் பாடமாக வைக்க சிபிஎஸ்இ திட்டமிட்டு வருகிறது. மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்காகப் பாடத் திட்டத்தில் சீர்திருத்தங்களைச் செய்ய சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகச் சைகைமொழி, பிரெய்ல் ஆகியவற்றைப் பாடமாக வைக்கவும், கணினிமுறைத் தேர்வு,...

சி.பி.எஸ்.இ. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பலாத்காரம் செய்யபட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி சோதனைகள்

 சி.பி.எஸ்.இ. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி சண்டிகரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட வழக்கில் குற்றவாளிகளைத் தேடிவரும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். 19 வயது இளம் பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. தேர்வில் முதலிடம் பிடித்தவர்....

‘பெண்குழந்தையைப் பாதுகாப்போம்’ என்ற பிரதமரின் கூற்று எப்படி சாத்தியம்? - கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட CBSE மாணவியின் தாய் கேள்வி

சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பாராட்டுகளை பெற்ற தமது மகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என அவரது தாயார் வலியுறுத்தியுள்ளார். ஹரியானாவில் நேற்று மாலை, பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை,...

வரும் 2020ம் ஆண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையை மாற்ற CBSE திட்டம்?

வரும் 2020ம் ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையை சிபிஎஸ்இ மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வொகேஷனல் எனப்படும் தொழில்சார் கல்வி பயிலும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் 15-ம் தேதிக்குள்ளும் தேர்வுகளை...

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை 3 பாடங்களே பயிற்றுவிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலான பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் பயிற்றுவிக்கும் புத்தகங்களை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சிபிஎஸ்இ...

சிபிஎஸ்இ கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

நடிகர்கள் குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு நாட்டிலே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கக்கூடிய சிபிஎஸ்இ யின் தரம் குறைந்துவிட்டதா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்...