​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசாம் குடிமக்கள் பதிவேடு மேம்படுத்தும் பணியில் ரூ.108 கோடி முறைகேடு

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு மேம்படுத்தும் பணியில் 108 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி (சிஏஜி) அலுவலகம் கூறியுள்ளது. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு துறையின் அப்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா...

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வேயின் இயக்க விகிதம் மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கை

2017-18ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் தலைமைத கணக்கு தணிக்கை அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வருவாய்க்கு எதிரான செலவினங்களில் ரயில்வே திறம்பட செயல்படவில்லை...

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய...

அரசியல் அல்லாத வழக்குகளில் சிபிஐ சிறந்த பணியாற்றுகிறது

அரசியல் தொடர்பு இல்லாத வழக்குகளில், சிபிஐ சிறப்பாக செயல்படுவது எப்படி என்பது குறித்தும், ஏன்? என்பது பற்றியும், தனக்குத் தானே, கேள்வி எழுப்பிக் கொள்வதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருக்கிறார். சிபிஐ அமைப்பின், நிறுவனரும், அதன் முதல் இயக்குநருமான, D.P.கோலி...

தமிழக அரசு 5 ஆண்டுகளில், ரூ.1.22 லட்சம் கோடி நிதியை பயன்படுத்த தவறிவிட்டது-சிஏஜி

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், கடந்த 5 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த தவறிவிட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில், இவ்வாறு...

மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசு ஒதுக்கிய 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் நிதியில், 3 ஆயிரத்து 676 கோடி ரூபாய் நிதியை, மாநில அரசு திருப்பி அனுப்பியிருப்பதாக, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்திருக்கிறது. 2017-2018ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய...

முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட 2.86 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் ஒப்பந்தம் - சிஏஜி அறிக்கை

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளின் போது மாநிலங்களவையில் மத்திய கணக்கு தணிக்கை...

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றபிறகு ஏற்படுத்தப்பட்ட, ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. இதனிடையே, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து, சிஏஜி எனப்படும்...

சிகாகோவில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடுகள்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒரே நாளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளில் 44பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 5பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சிக்காகோ நகரில் சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து பிற்பகல் 2 மணி வரை பல்வேறு இடங்களில் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்களில் துப்பாக்கிச்...

சென்னைக்கு மீண்டும் ஒரு இயற்கை பேரிடர்..! சி.ஏ.ஜி எச்சரிக்கை

சென்னையில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் 2015 ஆம் ஆண்டு போல மற்றுமோர் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க இயலாது என்று  கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது கனவிலும் சென்னைவாசிகள் நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு இயற்கை பேரிடர் நம்மை...