​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90 சதவீத விசாரணை நிறைவு - ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா,கிருஷ்ணன் ராமசாமி முன்பு...

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய காலத்தை மேலும் 10 வாரங்கள் நீடிக்க கோரிக்கை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கான காலத்தை மேலும் 10 வாரங்கள் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடததிவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையை வரும் 24ஆம் தேதி ஆணையத்தில் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்...

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு அப்பலோ மருத்துவமனை தடை கோரிய வழக்கு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்....

ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரும் 29-ஆம் தேதி ஆஜராக சம்மன்

ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரும் 29-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 140க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதி விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை...

தம்பிதுரையிடம் சுமார் 4 மணி நேரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தம்பிதுரை கூறி இருந்தார். இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஏற்கனவே கடந்த டிசம்பர் 18, ஜனவரி 7 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய நாட்களில் துறைசார்ந்த பணிகள்,...

ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் ஓ.பி.எஸ்.,க்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், 20-ஆம் தேதி ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பல்வேறு...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி ஆஜர்

ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணைக்கு ஆஜரானார். கடந்த முறை ஆஜரான போது அவர் செப்டம்பர் 22 ம் தேதி நிகழ்வுகளை முழுமையாக தெரிவித்ததாகவும், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்கள் தொடர்பாக...

மருத்துவர்களின் வாக்குமூலம் தவறாக பதிவு செய்யப்படுகிறது - அப்பலோ வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா

ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அப்பலோ மருத்துவமனை தரப்பு, இதற்கு தீர்வாக 21 மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பலோ...