​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சாலையில்...

புதுச்சேரியில் நிதிநிறுவன ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 பேர் கைது

புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி நான்கரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த நிதிநிறுவன ஊழியரான பாலசுப்பிரமணியன், நேற்று முன்தினம் புதுசேரியில் வசூல் செய்த பணத்தை பையில் வைத்துக்...

வங்கதேசப் பெண் போக்ஸோ சட்டத்தில் கைது - 7 பேருக்கு வலை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேசப் பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் வேலூர் காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் CMC அருகே சாலையில் சிறுமி ஒருவரை சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்த பெண்ணைப் பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில்...

வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள் கைது

கொடைக்கானலில் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மதுரை மாவட்டம் தெங்கள்பட்டியைச் சேர்ந்த மோகன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர் தனது நண்பரான நாகமலை புதுக்கோட்டையைச்...

5 நட்சத்திர விடுதிக்கு வெளியே துப்பாக்கியை காட்டி மிரட்டிய பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் கைது

டெல்லியில் 5 நட்சத்திர விடுதிக்கு வெளியே பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. கடந்த 14ஆம் தேதி, டெல்லியில் 5 நட்சத்திர விடுதி ஒன்றில், விருந்தினை முடித்துவிட்டு வெளியே வந்தபோது இந்த...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறையும், 60 லட்சம் ரூபாய் அபராதம்

இலங்கை கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா 3 மாத சிறையும், தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி...

இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த இருவர் கைது

சென்னை பூந்தமல்லியில் வழிப்பறிக்கு பயந்து தப்பியோடிய இளைஞர் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுதா ஓட்டல் அருகே பைக்கில் வந்த கமல் என்கிற மதுரை முத்து என்பவன், அவ்வழியே நடந்து சென்ற முன்பின் தெரியாதவரிடம், போதைப்...

கண்ணைக் கட்டி கொலை செய்ய முயற்சி... புதுமணப்பெண் கைது

சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு காற்று வாங்கச் சென்ற புதுமணத் தம்பதியை தாக்கி 12 சவரன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக புகார் கொடுத்த பெண்ணையே போலீசார் கைது செய்துள்ளனர்.  கணவனை பிடிக்காததால் கண்ணாமூச்சி விளையாடலாம் என கண்ணைக்...

போலீஸ் இன்ஃபார்மர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது

ஆந்திராவில் கஞ்சா கடத்தல் கும்பல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டச் சென்ற இன்ஃபார்மர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை கே.புதூரைச் சேர்ந்த நீலமேகம் அமரன் என்பவர் விசாகப்பட்டினம் மாவட்டம் நக்கபள்ளி, எலமச்சிலி சோதனை சாவடியில் நேற்று காலை வெட்டிக்...

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினுவை போலீசார் கைது செய்துள்ளனர். மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடிய ரவுடி பினு பின்னர் போலீசில் சரண் அடைந்தார். பின்னர், மாங்காடு காவல்நிலையத்தில்...