​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆப்கானிஸ்தானில் பேருந்தும், டிரக்கும் மோதி விபத்து - 15 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பேருந்தும், டிரக்கும் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபாரா மாகாணத்தில் உள்ள பக்வா மாவட்டத்தில் இருந்து காந்தஹார் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம்...

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பேச்சு

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் இயக்கத்தினர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது...

ஆப்கானிஸ்தான் - இந்தியா சாலைவழிப் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே சாலை வழியான சரக்குப் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது எனப் பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது. ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் வழியே சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ள இந்தியா அனுமதி கோரியிருந்தது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே சாலை வழியான சரக்குப் போக்குவரத்தைத் தொடங்க...

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக திகழ்கிறது : இந்தியா

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அருகில் உள்ள நாடு, சொர்க்கமாக விளங்குவதாக, ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இந்தியா மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. தூதுக்குழுவின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன், ஜெனீவாவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்....

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 249 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா 72 ரன்களும், ஜனாத் 45...

6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் இன்று தொடங்குகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் போட்டியில் விளையாடுகின்றன.. இதில் ஏ- பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. கேப்டன் விராத் கோலிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு...

சார்லி சாப்ளின் வேடமிட்டு மக்களைக் கவரும் ஆப்கன் இளைஞர்

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தானில் இளைஞர் ஒருவர் சார்லி சாப்ளின் வேடமிட்டு மக்களைக் கவர்ந்து வருகிறார். 25 வயது இளைஞரான கரீம் ஆசிர் ((Karim Asir)) சாப்ளின் போலவே வேடமிட்டுக் கொண்டு பூங்காக்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகளை...

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு நங்கர்ஹார் ((Eastern Nangarhar)) என்ற இடத்தில் உள்ள காவல் அதிகாரியைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கூட்டத்தில் புகுந்த தீவிரவாதி ஒருவன் தான் மறைத்து வைந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்தத்...

மல்யுத்தப் பயிற்சி மையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூல் அருகே செயல்பட்டு வந்த மல்யுத்தப் பயிற்சி மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தஷ்த் இ பார்சி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் தங்கள் உடலில் கட்டியிருந்த...

ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

ஆஃப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். டெஹ்தாதி என்ற மாவட்டத்தில் இருந்து 14 பேருடன் புறப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் மஸார் ஐ ஷரிஃப் என்ற இடத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் உக்ரைனைச் சேர்ந்த...