​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 55 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர், தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது,...

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில், 6 பேருக்கு சம்மன்

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு வழக்கில், முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்ட 6 பேருக்கு திங்களன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வணங்காமுடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மூலம், பேராசிரியர்கள் நியமனம், வெளிநாடுவாழ் இந்திய...

3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சேலத்தில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி கணக்காசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கணக்கு...

காவல்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தமிழக காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது, பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார்குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 4 ம்தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய பெண் காவல் அதிகாரி தமது மேலதிகாரியான...

குழந்தைக் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இது தொடர்பான வழக்கில் குழந்தைக் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும்...

ஜார்க்கண்டில் 2 சிறுமிகளை அடுத்தடுத்து கொடூரமாக பலாத்காரம் செய்த 11 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 சிறுமிகளை அடுத்தடுத்து கொடூரமாக பலாத்காரம் செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 16-ம் தேதி லோஹர்டகா பகுதியில் பக்கத்து வீட்டுக்காரருடன் பைக்கில் சென்ற சிறுமிகள் இருவர் பைக் பழுதாகிவிட்டதால் உதவிக்கு வருமாறு தமது நண்பனை அழைத்துள்ளனர். ஆனால்,...

அண்ணா பல்கலைக் கழக முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால், தன் மீது குற்றச்சாட்டு கூறப்படுவது முறையல்ல

அண்ணா பல்கலைக் கழக முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால், தன் மீது குற்றச்சாட்டு கூறப்படுவது முறையல்ல என்று உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் வேதனை தெரிவித்துள்ளார் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் பொறுப்பு வகித்து வருபவர் சுனில் பாலிவால். கடந்த...

காப்பகங்களில் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி

காப்பகங்களில் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் மதன் பி லோகுர்((Madan B Lokur)), அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வு முன்...

பீகாரில் 15 சிறுவர் காப்பகங்களில் பாலியல் வன்கொடுமைகள் என புகார்

பீகாரில் 15 சிறுவர் காப்பகங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது. முசாஃபர்பூரில் காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அவலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில் டாடா சமூக அறிவியல் கல்வி மையம் 35 மாவட்டங்களில் 110 காப்பகங்களில்...

TNPSC குரூப்-1 விடைத்தாள் முறைகேடு வழக்கு - அப்பலோ பயிற்சி மைய இயக்குனரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு

TNPSC group-1 விடைத்தாள் முறைகேடு வழக்கில் சென்னையை சேர்ந்த 'அப்பலோ பயிற்சி மைய' இயக்குனர் சாம் ராஜேஸ்வரனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என மத்திய குற்றப் பிரிவு போலீசார், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  கடந்த மாதம், சாம் ராஜேஸ்வரனுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம்...