​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு என தகவல் : பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தூத்துக்குடி பொதுமக்கள் சிலர் தம்மிடம் தெரிவித்ததாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார பாதிப்பு தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.  ...

சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து கேட்பு கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த மூவர் குழு, சென்னை பசுமைத் தீர்ப்பாய வளாகத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், அதுகுறித்து...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பெரும்பாலோர் எதிர்ப்பு என ஆய்வு செய்த பசுமைத் தீர்ப்பாயக் குழுத் தலைவர் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என பெரும்பாலோர் மனு அளித்துள்ளதாக பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக் குழுத் தலைவர் தருண் அகர்வாலா தெரிவித்துள்ளார்.தமிழக அரசு சீல் வைத்ததை தொடர்ந்து ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களை, பொதுமக்கள் தாக்க முற்பட்டதால் பதற்றம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என பெரும்பாலானோர் மனு அளித்துள்ளதாக, தேசியப் பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மனு அளிக்க வந்தவர்களை, பொதுமக்கள் தாக்க முற்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக...

ஸ்டெர்லைட் ஆலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குழு ஆய்வு

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவினர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை தொடர்ந்து, அந்த ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்,...

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு அறிக்கை 6 வாரத்திற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும் : ஆய்வுக்குழு

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குறித்த அறிக்கை  6 வாரத்திற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர்...

ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு..! பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாய...

ஸ்டெர்லைட் ஆலையை இனி இயக்க முடியாது : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்பட வில்லை என்ற...

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரத் தாது அகற்றும் நடவடிக்கை தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரத் தாதுக்களை அகற்றும் நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்க இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 90 சதவீத அமிலங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அங்கு 95 டன் தாமிரத்...

ஸ்டெர்லைட் தில்லு முல்லு..! இது காசுக்கு சேர்த்த கூட்டம்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட்டை...