​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை -3 பேரிடம் விசாரணை

வேலூரில் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் பச்சையப்பாஸ் துணிக்கடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை...

மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ. 3 லட்சம் பணம் திருட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காட்பாடி பாரதிநகர் பகுதியில் வசித்து வரும் ரமணய்யா, குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற...

சுங்கச்சாவடிகள் தோறும் வாகன நெரிசல்

பொங்கல் பண்டிகை முடிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோரின் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதே போல தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சுமார் 10...

அண்ணா பல்கலை - அமைச்சர் கருத்து

அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவை அவசரப்பட்டு எடுக்கமாட்டோம் என்றும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவோடு 2வது கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறினார். வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் “தேசிய விண்வெளி சவால்...

காதலனை தாக்கிவிட்டு காதலியிடம் அத்துமீற முயன்ற கஞ்சா போதை கும்பல்

வேலூரில் காதல் ஜோடியை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் பச்சையப்பாஸ் துணிக்கடையில் வேலை செய்து வரும் அஜித் என்ற இளைஞரும் அதே கடையில் பணிபுரிந்து வரும் இளம் பெண்...

காணும் பொங்கல்.. தமிழகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர். திருவாரூரில் காணும் பொங்கல் ஒட்டி ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற போட்டிகள், நீச்சல்...

மாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் படுகாயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற மாடுவிடு திருவிழாவின் போது மாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். குட்லவாரிபல்லி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவினை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த...

ஊர் தோறும் பொங்கல் விளையாட்டு...

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் விதவிதமான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஊர்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 70 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட...

மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்டாட்டம்..!

உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் சேலத்தில் கன்னங்குறிச்சி, புது ஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது....

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை-துரைமுருகன்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொதுமக்களுடன் பொங்கல் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,...