​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜல்லிக்கட்டு காளையுடன் மல்லுக்கட்டிய கைபுள்ளைகள்..! புரட்டி எடுத்த மஞ்சுவிரட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் சிறப்பாக நடந்த நிலையில், மஞ்சு விரட்டில் கட்டவிழ்க்கப்பட்ட காளைகளிடம் சிக்கிய சிலர் சாமர்த்தியமாக தப்பினாலும், ஆர்வமிகுதியால் காளைகளிடம் சிக்கிய கைப்புள்ளைகளின் பரிதாப காட்சிகள் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்...

தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த அச்சம் தேவையில்லை - ராம் விலாஸ் பாஸ்வான் விளக்கம்

தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான விண்ணப்பத்தில், குடிமக்களின் தாய் தந்தையரின் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட விவரங்களை கேட்கக்கூடாது என்று பரவலாக எழுந்துள்ள கோரிக்கையை, அரசு ஏற்கும் என, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் தொகை...

என்.பி.ஆர் - மத்திய அரசு திட்டவட்டம்..!

தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ அல்லது ரேகையைப் பதிவிடும் பயோமெட்ரிக் பதிவுகளோ கேட்கப்பட மாட்டாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது....

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி..

பொங்கல் திருநாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க...

களைகட்டும் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாதவரத்திலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் பட்டுப்புடவை அணிந்து வந்து புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியிலுள்ள கலை மற்றும் அறிவியல்...

காசி கோயில் கருவறைக்குள் சென்று வழிபட ஆண்,பெண் பக்தர்கள் இனி இந்த ஆடை தான் அணிந்து வரவேண்டுமா ?

உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்குள் சென்று, சுவாமியை வழிபட, ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்து மதக் கோட்பாடுகளின்படி, முக்தி தரும் ஏழு நகரங்களில், வாரணாசியும் ஒன்று. காசி என்றும்,...

தஞ்சை கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

தஞ்சை பாரத் கல்லூரியில் கும்மியடித்தும் குலவையிட்டும் மாணவ, மாணவிகளால் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரியத்தை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது. தென்னை ஓலையால் குடிசை வேய்ந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, மாணவ, மாணவிகள் மண் பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல்...

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படமாட்டார்கள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படமாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், பெற்றோர்களின் பெயர்கள் பதிவேட்டில் இருந்தாலும் குழந்தைகளின் பெயர்கள்...

உலக வேட்டி தினம் எப்போது முதல்.? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.!

ஜனவரி 6-ம் தேதியான இன்று உலக வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. ஆனால் இன்றைய தலைமுறையினர் வேட்டி கட்டும் வழக்கத்தை அரிதாக்கி கொண்டுள்ளனர். பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனவரி 6 உலக...

தமிழகம் முழுவதும் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் தங்கமணி

பொதுமக்கள் அளிக்கும் தகவல் மற்றும் மின்வாரிய ஆய்வுகளின் அடிப்படையிலும் தமிழகம் முழுவதும் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு, ஆயிரம் ரூபாய் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் திட்டத்தை அமைச்சர்கள்...