​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"மாத்தி யோசி".. குரங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்ற விவசாயி செய்த பலே ஐடியா

நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு கிராமத்தில் விவசாய தொழில் தான் பிரதானம். இங்கு வசிக்கும் விவசாயிகள்...

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் காலை கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிருடன், சாலை கண்ணுக்கு தெரியாதவாறு பனி சூழ்ந்து காணப்பட்டது. வாகன...

நெருங்கும் தீபாவளி..! கடைவீதிகளில் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், நகைகள் வாங்க மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகள், நகைகடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதாலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்...

குவியல் குவியலாக இறந்து ஒதுங்கிய மீன்கள்..! தனுஷ்கோடி அருகே மர்மம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தை அடுத்த பாக் ஜலசந்தி பகுதியில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான ஒயிலி வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த...

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. சென்னை நகரில் 3 வது நாளாக நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அருகே உள்ள...

தமிழகத்தில் பரவலாக மழை..!

தமிழகத்தில் நாளை மறு நாள் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதே பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரங்களான பூப்பெட்டி, நெய்விளக்கு, அகஸ்தியன் பள்ளி, தோப்புதுறை, தேத்தாகுடி, செம்போடை உள்ளிட்ட இடங்களில் மிதமான...

மகனால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்ட மூதாட்டி

தூத்துக்குடி அருகே மகனால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டு பட்டினியாலும், கொட்டும் மழை - வெயிலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை வருவாய்த்துறையினர் உதவிக்கரம் நீட்டி மீட்டு மருத்துவமனயில் அனுமதித்தனர். கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி சண்முகத்தாய். இவர் தனது...

விவசாயத்துறையில் ரோபோ - ஆராய்ச்சியில் உலக நாடுகள்

மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, எதிர்கால விவசாய பொருட்களின் உற்பத்தியை பெருக்க, உலக நாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன. விளை நிலங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைவிக்கப்படும் காய், கனிகளை விவசாயிகள் இயந்திர பயன்பாட்டை தவிர்த்து கைகளை...

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குளுமைப்படுத்தப்பட்டுள்ள மைதானம்

2022 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள கத்தார் விளையாட்டு அரங்கை அந்நாட்டு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு, குளுமை படுத்தியுள்ளது. வளைகுடாவில் உள்ள சிறிய நாடான கத்தாரில் வெயில் காலங்களில் பாலைவனத்தை போன்று  வெப்பம் சுட்டெரிக்கும். இந்நிலையில் இங்குள்ள...

குற்றலாத்தில் பொங்கி சீறும் அருவிகள்..!

தொடரும் மழையால் குற்றாலத்தில் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் சுமாராக இருந்த நிலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அருவிகள் தொடர்ந்து பொங்கி பாய்ந்த வண்ணம் உள்ளன. தற்போது சீசன் காலம் நிறைவடைந்த நிலையிலும் அருவிகள்...