​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை : ஓ.பன்னீர்செல்வம்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது பற்றி, தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்யும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட இயற்கை பேரிடரை...

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி - ராகுல் காந்தி

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்தூர்-உஜ்ஜைன் இரட்டை நகரில் உள்ள மகா காளேஸ்வரர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.பாரம்பரிய முறைப்படி...

விவசாய கடன் என்ற பெயரில் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் உட்பட 47 பேருக்கு சிறை தண்டனை

விவசாய கடன் என்ற பெயரில் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 47 பேருக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.  2009 - 10-ஆம் ஆண்டுகளில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா திருவண்ணாமலை கிளையில் மேலாளராக பணியாற்றிய கண்ணன், காசிநாதன்...

காலத்தை வென்ற கலைஞரின் திட்டங்கள்..!

தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர், தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியவர், மகளிருக்கு தனி ஒதுக்கீடு தந்தவர் என்ற பல திட்டங்களை அமல்படுத்திய பெருமைக்கு உரியவர் கருணாநிதி. 5 முறை முதலமைச்சராக இருந்த அவரது ஆட்சியின் சாதனைகளில் சிலவற்றை சொல்கிறது இந்த...

விவசாய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை - குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய திட்டம்

கர்நாடகத்தில் 2 லட்ச ரூபாய் வரையுள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும், கடனைக் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாகவும் முதலமைச்சர் குமாரசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள அரசின் முதல் பட்ஜெட்டை முதலமைச்சர் குமாரசாமி...

ஈரோடு அருகே கிராம மக்களே உருவாக்கி வரும் குளம்

ஈரோடு அருகே குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் புதிதாக குளம் அமைக்க, 41 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி, பாம்பகவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதானமாக...

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் காந்தி

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு இதே நாள் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நடந்த...

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி 8 மாநிலங்களில் விவசாயிகளின் பத்து நாள் போராட்டம் தொடங்கியது

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  முன்வைத்து எட்டு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரம், கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் பத்து நாட்கள் போராட்டத்தை...

கர்நாடகத்தில் ரூ.53,000 கோடி விவசாயக் கடன்கள் ரத்து செய்வது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை

கர்நாடக விவசாயிகளின் வங்கிக் கடன்கள் 53 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்வது குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலத்தின் நிதிநிலைமையை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது 53 ஆயிரம் கோடி ரூபாய்...

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும் - நாராயணசாமி

மத்திய அரசின் நம்பிக்கையை இழந்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் விவசாய கடன் தள்ளுபடி, வாரியத்தலைவர் நியமனம் மற்றும் பதவி...