​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை விமான நிலையம் - மெட்ரோ ரயில் நிலையம் இடையே வாக்கலேட்டர் வசதி இன்று தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான நிலையத்தை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாக்கலேட்டர் வசதி கடந்த மார்ச் மாதமே தொடங்கி வைக்கப்பட்ட போதிலும், அப்போது சர்வதேச விமான நிலையத்துக்கான வாக்கலேட்டர் பணிகள் நிறைவடையாததால்...

தமிழகத்திலும் பாதுகாப்புத்துறை தொழில் பூங்கா அமைக்கப்படும் - பிரதமர் மோடி

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். திருவிடந்தை கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர்...

ராட்சத விளம்பரப் பலகை மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

சென்னை விமான நிலையம் அருகே ராட்சத விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் போல் நுழைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விளம்பரப் பலகையில் மேல் ஏறி கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர். போலீசார் மேலே ஏறினால்...

ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் அருகே ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருவதை ஒட்டி, ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடந்தையில் 14ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார்...

மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆறு மணி நேரம் மூடப்பட உள்ளது

மும்பை விமான நிலையத்தின் முதன்மையான ஓடுபாதையில்  பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆறு மணி நேரம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் மிக அதிகமான விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள முதன்மையான ஓடுபாதையில் மணிக்கு 48 விமானங்கள்...

மே 1 முதல் ஜலந்தர்-டெல்லி விமான சேவை தொடங்கம்

பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து டெல்லிக்கு உடான் திட்டத்தின் கீழ் விமான சேவை வரும் மே 1-ம் தேதி தொடங்கப்படுகிறது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர விமானப் பயண தூரம் கொண்ட நகரங்களை இணைக்கும் வகையில் விமான...

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

பிரதமர் மோடி, வரும் 12 ஆம் தேதி சென்னை வர உள்ளதை ஒட்டி ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு, வரும் 12 ஆம்...

இந்திய மூதாட்டியின் அச்சத்தால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம்

இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம் ஏற்பட்டது. பிரிஸ்பேன் விமானநிலையத்தில் ‘பிரிஸ்பேனுக்கு வெடிகுண்டு’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘பாம் டு பிரிஸ்பேன்’ என்ற பேக்குடன் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அந்தப் பையைச்...

பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2,000 கோடி ரூபாய் மோசடி - தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது

ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி விமான நிலையத்தில் வைத்து, புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட...

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

சேலம் விமான நிலையத்தை விரிவாக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1993 ஆம் ஆண்டு சேலம் காமலாபுரத்தில் 165ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருமுறை விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டு பயணிகள் வருகை இல்லாத...