​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒத்த செருப்பு படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் - நடிகர் பார்த்திபன்

தமது சொந்த திரைப்படமான ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசும் , மாநில அரசும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படமான ஒத்த செருப்பு வருகிற 20ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து...

காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கார கட்சி - மாயாவதி கடும் விமர்சனம்

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கார கட்சி என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும்...

ஐநா.மனித உரிமைக் குழு மாநாட்டில் இம்ரான் கான் கலந்து கொள்ள எதிர்ப்பு

ஸ்விட்சர்லாந்து நகரான ஜெனிவாவில் நடைபெறும் ஐநா.மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக் கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், கண்டனம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியான பலூசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிந்தி இன மக்கள்...

சப்பாத்தியும், உப்பும் மதிய உணவாக தரும் வீடியோ சித்தரிக்கப்பட்டது - யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்று வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சியூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்கள்...

தேர்தல் மட்டுமே காங். தலைவரை தேர்ந்தெடுக்க ஒரே வழி - சசிதரூர்

தேர்தல் நடைமுறை மட்டுமே காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஒரே வழி என்று முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் திருவனந்தபுர எம்.பி.யுமான சசி தரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் முறை காங்கிரஸ் நிர்வாகிகளின் விருப்பமாக இல்லாதவரை எதுவும் மாறாது என்றும் அவர்...

பாஜகவிற்கு விசுவாசமான தலைவராக பணியாற்றியவர் தமிழிசை - ஓ.பன்னீர் செல்வம்

பாஜகவிற்கு விசுவாசமான தலைவராக பணியாற்றியவர் தமிழிசை என்றும் தெலங்கானா ஆளுநர் பதவி அவரின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தமிழிசையின் பதவியேற்பு விழாவில் தமிழக...

வெளிநாட்டு பயணம் சென்றுள்ள தமிழக முதலைமைச்சரை விமர்சிப்பது தவறு -கருணாஸ்

அரசு சார்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதை வரவேற்பதாக எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்எல்ஏவும் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வெளிநாடு சென்று...

பாகிஸ்தான் பொறுப்பில்லாத அண்டை நாடு என ஜெய்சங்கர் விமர்சனம்

பாகிஸ்தான் பொறுப்பில்லாத அண்டை நாடாக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அந்நாட்டு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் காஷ்மீர் விவகாரம் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

பாகிஸ்தான் பிரதமர் திறமையற்றவர் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பாகிஸ்தான் பிரதமர் திறமையற்றவர் என விமர்சித்துள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், ஜம்மு காஷ்மீரை மறந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, தனது தந்தை மற்றும் அத்தையை அடியாலா சிறையில் சென்ற...

முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் வெளிப்படையானது-ஜெயக்குமார்

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது "தான் திருடி பிறரை நம்பாது" என்பதை போன்று உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் நடந்த குறைதீர் முகாமில் பங்கேற்றபின்,...