​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாளில் கடந்த ஆண்டு வரை இடம்பெற்ற 40 கேள்விகள்,...

மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க கோரி முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்

NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். NEET, JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, நாமக்கல் மாவட்டத்தில் 285 முதுகலை ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயிற்சி...

CBSE வினாத்தாள் கசிவதை தடுக்க Microsoft நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறை உருவாக்கம்

சி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிவதை தடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இதன் படி தேர்வு மையத் தேர்வாளர்கள் தேர்வு தொடங்க அறை மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் தேர்வாளர்கள் ஓடிபி எனப்படும் ஒருமுறை...

நீட் தேர்வை அவரவர் மாவட்டத்திலேயே இனி எழுதலாம்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வில் தமிழில் வினாத்தாள் தயாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கேள பயன்படுத்தப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறித்து மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் கேள்வி எழுப்பினார்....

நீட், ஜேஇஇ மெயின் தேர்வு ஒவ்வொரு தேர்வருக்கும் வெவ்வேறு விதத்தில் வினாத்தாள்

நீட், ஜேஇஇ மெயின் தேர்வு வினாத்தாள் ஒவ்வொரு தேர்வருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. உயர்கல்வி நுழைவுத் தேர்வு முறையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ படிப்புக்கான நீட், ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வுகளை ஆண்டுக்கு...

ஐ ஐ டி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்கும் உத்தரவுக்கு தடை

ஐ ஐ டி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாற்றியமைக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், எந்த முறையில்...

TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழி வகுக்கும் - அன்புமணி ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழி வகுக்கும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், போட்டித் தேர்வுக்கான வினாத் தாள்களை...

11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creative கேள்விகள் : மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் 20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு...

நீட் தேர்வில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை எம்.பியான டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்திருந்த மனுவில்,தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களில் 49 கேள்விகள்...

மேல்நிலைப்படிப்பில் மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவு

மேல்நிலை மொழிப்பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தாளாக தேர்வுகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி மற்ற மாநிலங்களைப் போன்றே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப்பாடங்களுக்கு...