​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கட்டிட விபத்தால் காஞ்சி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒப்படைக்க கோரிய தனியார் நிறுவனத்தின் மனு தள்ளுபடி

சென்னை, மவுலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடித்ததற்கான செலவு தொகை ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே, நிலத்தை ஒப்படைக்க முடியும் என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கட்டடம் இடிந்து...

லஞ்சப் புகாரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.  சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதத் தொகையை...

போத்தீஸ் ஜவுளி கடைக்கு சீல்..! விதியை மீறியதால் நடவடிக்கை

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரே விதிகளை மீறி கட்டப்பட்ட போத்தீஸ் ஜவுளிக்கடையை நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். நாகர்கோலில் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு எதிரிலேயே ராமவீரபுரத்தில் ஆடம்பரமாக திறக்கப்பட்டு.. விதிமுறையை மீறி கட்டியதாக...

விதிகளை மீறிக் கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல்

கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் துணிக்கடைக்கு உள்ளூர் திட்ட குழுமத்தினர் சீல் வைத்தனர். கும்பகோணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சில்க்ஸ் துணிக்கடை புதிதாக கட்டி திறக்கப்பட்டது. ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு...

கட்டிடப் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மண்சரிவு - ஒருவர் உயிரிழப்பு

மதுரையில் கட்டிடப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கீழவாசல் மைனா தெப்பகுளம் 3வது தெருவில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. 4 கூலித் தொழிலாளர்கள்...

ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கேற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கேற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரயில்களில் செல்லும் பக்தர்கள், ரயில்களில் வழிபாடு நடத்தும்போது, கற்பூரம் மற்றும் விளக்குகளை ஏற்றுவதாக புகார்கள் வந்தன. இதனால் ரயில்களில் தீ விபத்து...

டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோகனுக்கு 3 ஆண்டு சிறை

அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோகனுக்கு (Michael Cohen) 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் கோஹன், டிரம்பின் வழக்கறிஞராக இருந்தபோது அவருக்காக துப்பாக்கித் தோட்டாக்களை கூட தாங்குவேன் என்று கூறியிருந்தார். அதிபராவதற்கு முன்னர் டிரம்புடன் இருந்த ரகசிய...

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த NGO ஊழல் புகார்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் நிதிசார் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை நடத்தும் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. ஷெர்பா ((Sherpa)) என்ற அந்த தொண்டு நிறுவனம் அளித்துள்ள புகாரில், 36 ரஃபேல் விமானங்களுக்காக...

உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு

உணவுப் பொருட்களை அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்ற 114 திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் நலத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்,...

ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சேவையில் விதிமீறல் என ஜியோ புகார்

ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சேவையில் விதிமீறல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய தொலைதொடர்பு ஆணையத்திடம் ஜியோ நிறுவனம் புகாரளித்துள்ளது. ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு மூலம் ஆப்பிள் வாட்ச்சையும் இயக்க முடியும்....