​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு துவங்கியது

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள். தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து...

பி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளன.   தமிழகம் முழுவதுமுள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 50 சதவீதம் பணி உயர்வு மூலமும் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு வாயிலாகவும்...

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஆசிரியர்கள் ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூன் 19 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக...

2022க்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் - ISRO தலைவர் சிவன்

2022க்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பக்கூடிய திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை...

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நிறைவு

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வியாழனன்று நிறைவடைந்தது. பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 3-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை வழங்கப்பட்டன. ஒர லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த...

பொறியியல் படிப்பு விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக பெற இயலாது - அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் கட்டணத்தை வரைவோலையாக பெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல் இருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. டி.டி. பெற்றுக் கொள்ளப்படும் என காலையில் கூறிய நிலையில் மாலையில் முடிவு மாற்றப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்துச்...

வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் பி.இ படிப்புக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும்? - அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் பி.இ படிப்புக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவோலை மூலமாகவோ செலுத்தி விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர்...

இன்று முதல் அதிமுக உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள்

அதிமுகவில் இன்று முதல் உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தினகரன் ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் உறுப்பினர்...