​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விவசாயி நெல் ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர்கள் 3 பேர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்

சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை...

கஜா புயல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் ...

நலத்திட்டங்களை விமர்சிக்கும் சிலர், தங்கள் வீட்டு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உதவியது உண்டா?: விஜயபாஸ்கர்

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை விமர்சிக்கும் சிலர், தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உதவிய வரலாறு இருக்கிறதா? என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதிமுகவின் 47ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி,  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில்...

தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்புதானத்தில் கின்னஸ் சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்புதானத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்தினால்...

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு டிசம்பர் 9ஆம் தேதி தேர்வு - விஜயபாஸ்கர்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு டிசம்பர் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர்...

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 7.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளால், எதிர்பார்த்ததை விட அதிகமானோர் பயன்பெற்றிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்...

இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட அந்தோணியார்புரம், சௌராஷ்ட்ராதெரு, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து...

பன்றிக்காய்ச்சலிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

குடும்பத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சால் ஏற்பட்டால், குடும்பத்தினர் அனைவருமே பன்றிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டிருக்கிறார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் 24 மணிநேர காய்ச்சல் சிறப்பு மைய வார்டுகளில், அவர் ஆய்வு...

டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மட்டுமே இறப்புக்குக் காரணமல்ல - விஜயபாஸ்கர்

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் மட்டுமே இறப்பு ஏற்படுவதில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம், தாய்சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்று திறந்து வைத்த...

பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் - விஜயபாஸ்கர்

பன்றிக் காய்ச்சலால் மட்டுமே ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவதில்லை என்றும், பன்றிக் காய்ச்சல் முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய நோய் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...