​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீட் தேர்வில் சென்னை மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் உதித்சூர்யா படித்து வந்த தேனி அரசு...

இலங்கையில் ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரிக்க புதிதாக ஐவர் குழு

இலங்கையில், ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரிக்க, அந்நாட்டு அதிபர், நீதிபதிகள் கொண்ட 5 பேர் குழுவை ஏற்படுத்தியுள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தற்கொலை படை தீவிரவாதிகள் 9 பேர் நடத்திய...

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது

புதுச்சேரியில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை அடுத்த ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் பாகூர் காவல்துறையினர்...

பாலத்தின் மீதிருந்து ஆற்றில் பாய்ந்த கார்..!

சென்னை சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்காம் கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த விறுக்குமார் மற்றும் அஜய் ஆகியோர் காரை எடுத்துக் கொண்டு...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சிகள் பறிமுதல்..!

மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சி குரங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்தாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக...

ராமஜெயம் கொலையில் 7 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை

திருச்சியில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆனநிலையில், 4 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியும், எவ்வித துப்பும் துலங்காததுடன், சிறிதளவு முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம், கடந்த 2012...

200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார்

ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்த போலீஸார், 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்டபம் மற்றும் வேதாளைப் பகுதிகளில் அரிய வகை கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம்...

வழக்கறிஞரின் கொள்ளை நாடகம் - விசாரணையில் அம்பலம்

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியை சிக்க வைக்கும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரான சத்தியமூர்த்தி,...

பிரபல ஜவுளி நிறுவன பெயரில் துணி விற்பனை செய்த நபர்

சேலம் அருகே பிரபல ஜவுளி நிறுவனத்தின் பெயரில் துணிகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சேலம் நான்கு சாலை அருகே உள்ள பெரமனூரில் துளசிதாஸ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட...

காப்பகம் ஒன்றுக்கு நன்கொடை கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு..!

அருப்புக்கோட்டையில் மின்சாதன விற்பனையகத்தில் காப்பகத்துக்கு நன்கொடை கேட்பது போல நடித்து செல்போன் திருடியவரை சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். கடைகள், அலுவலகங்களில் செல்போன்களை மேசை மீது வைத்துவிட்டு பணியை பார்ப்பது வழக்கமான ஒன்று. இதை நோட்டமிட்டு மேசை மீது உள்ள...