​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் இந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 8-ஆம்...

பருவமழை எப்போது பெய்யும்.....?

கடந்த 12ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில் தான் பருவமழை தீவிரம் அடைய மிகவும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளில் இந்நேரம் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் பருவமழை தொடங்கி இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த...

பலவீனமடைந்துள்ள 'வாயு' புயல் இரவு கரையை கடக்கிறது

பலவீனமடைந்துள்ள, 'வாயு' புயல், குறைந்த காற்றழுத்தமாக மாறி, குஜராத் கடற்கரையை கடக்கிறது. தென் மேற்கு பருவமழை கடந்த 6ம் தேதி துவங்கியதையடுத்து, அரபிக்கடலில், குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது, புயலாக தீவிரமடைந்த நிலையில், 'வாயு' என பெயரிடப்பட்டது. வாயு புயல் குஜராத்தின் போர்பந்தர்...

ஜூன் 16க்கு பின் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் 16ம் தேதிக்கு பின், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பவரு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவ மழைக்காலம் ஜூன் 12ம் தேதி தொடங்கும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் குஜராத்தின்...

"யு டர்ன்" எடுக்கும் வாயு?

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயல் மீண்டும் குஜராத்தை நோக்கி திரும்பக் கூடும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி குஜராத்தை நோக்கி நகர்ந்தது. சவுராஷ்டிரா மண்டலத்தில் வெராவல் மற்றும் துவாரகா கடற்கரை இடையே...

குஜராத்தைத் தொட்டும் தொடாமலும் திசை மாறியது வாயு புயல்

வாயு புயல் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியது என்றாலும் அதன் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  குஜராத்தை தாக்க இருந்து ஓமனை நோக்கி திசைமாறிப் போன வாயு புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடலோர...

குஜராத்தை மிரட்டிய வாயு புயல் ஓமன் நோக்கிச் செல்கிறது

அதி தீவிர புயலாக மாறிய வாயு, ஓமன் நோக்கி திரும்பி உள்ளதால் குஜராத் தப்பி உள்ளது. அரபிக்கடலில் உருவான அந்த புயல் வியாழன் அன்று குஜராத் மாநிலத்தில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதன் அன்று இரவில் தனது பாதையை மாற்றிக் கொண்ட...

தேசியப் பேரிடர் மீட்புப் படையினரின் உதவியால் பிரவித்த பெண்

குஜராத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உரிய நேரத்தில் உதவி செய்ததால் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பிரசவித்தார். படகுப் போக்குவரத்து மட்டுமே உள்ள சையால்பேட் எனும் கிராமத்தில் திடீரென கர்ப்பிணி ஒருவருக்கு நிர்ணயித்த பேறு காலத்துக்கு முன்பே வலி ஏற்பட்டது. ஏற்கெனவே வாயு புயல்...

இரவோடு இரவாக திசைமாறிய அதிதீவிர வாயு புயல்

அதிதீவிர புயல் வாயு திசைமாறியிருப்பதால், தற்போதுள்ள நிலவரப்படி குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான வாயு புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதிதீவிர புயலாக உள்ளது. குஜராத்தின் போர்ப்பந்தருக்கு தெற்கே 180...

குஜராத் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கிறது வாயு புயல்

வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்க உள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.  அரபிக்கடலில் உருவான வாயு புயல், நேற்று அதி தீவிர...