​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதுதொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது...

டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டது செல்லாது - தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம்

டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கியது செல்லாது என்று தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டாடா குழுமமான டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக 2012 ஆம் ஆம் ஆண்டு பதவி ஏற்ற சைரஸ் மிஸ்திரி, 2016ல்...

அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  அயோத்தியில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோவில் கட்டலாம் என்று கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம்...

மதம் மாறியபின் ஆதிதிராவிடர் சான்றிதழ் கொண்டு தேர்தலில் போட்டி - தடை கோரிய வழக்கு தள்ளுபடி

உள்ளாட்சித் தேர்தலில் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறிய...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி

அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்துள்ள இலங்கை உயர்நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று, 2 நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்டார். அவர், தன்னுடைய...

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

சென்னையில் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது....

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் மனு தள்ளுபடி

பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனம் மீண்டும் குவாரிகளை இயக்க அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. அந்நிறுவன பங்குதாரர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பிற கிரானைட் குவாரிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கிரானைட் கற்கள்...

"நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

"நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரி, சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரின் தந்தை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த...

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சங்கரசுப்பிரமணியம் என்ற அந்த வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில், நாங்குநேரி தொகுதியில் ஆளுங்கட்சியினர் முகாமிட்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தில்...

நிலக்கரி சாம்பலை அகற்றுவதற்கான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலை அப்புறப்படுத்துவதற்காக அனுபவமில்லாதவர்களுக்கு வழங்கும் விதத்தில் விதிகளை மாற்றி விடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டர் நடவடிக்கைகளில் பங்கேற்காத...