​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து, அரிவாள்மனையால் வெட்டியதாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூரில் இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து, அரிவாள்மனையால் வெட்டியதாக கணவர், மாமனார்-மாமியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி பின்புலம் இருப்பதால், குடும்பப் பிரச்சனையை, வரதட்சணை கொடுமை என திசை...

இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் வாழும் விகிதம் குறையுமென ஆய்வில் தகவல்

இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்தால் பெண் குழந்தைகள் உயிர் வாழும் விகிதம் குறையுமென ஆய்வு ஒன்று கணித்துள்ளது. 1972 முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1 லட்சம் பிறப்புக்களை மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு, தங்க விலை ஏற்ற, இறக்கத்தோடு ஒப்பீட்டுக்கு...

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உள்ளது. வரதட்சணைக் கொடுமைப் புகார் அளிக்கப்பட்டால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பின்னரே குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தின் இரண்டு...

வரதட்சனை கொடுமையால் பெண் விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 3 குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை எனத் தெரியவந்துள்ள நிலையில் பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண் தனது...

ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை பெரும்பாக்கத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான சுரேஷ் மனைவி பார்கவி என்ற ரோகினியுடன் பெரும்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் பெண்...

100 சவரன் நகைக்காக நிறுத்தப்பட்ட ஆசிரியையின் திருமணம்..!

திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு, ஆசிரியையின் திருமணத்தை நிறுத்திய தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும்...

IPS அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மனுதாரர் பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உதவி காவல் கண்காணிப்பாளரான வருண்குமார், ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தபோது, ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த...

திருப்பத்தூர் அருகே கடனுக்காக மனைவி கத்தியால் குத்தி படுகொலை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் கணவனைப் போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூரைச் சேர்ந்த அல்தாப் பாஷா- நசிமா தம்பதிக்கு இடையே வரதட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியுடன் தகராறுசெய்த...

பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராஃப் பெற்ற இளம் பெண்ணுக்கு வரதட்சணையே கேட்காத வரன்கள் அதிகம் வருகிறது

மருத்துவமனை படுக்கையில் சிகிச்சையில் இருந்த போதும் பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராஃப் பெற்ற இளம் பெண்ணுக்கு வரதட்சணையே கேட்காத அதிக வரன்கள் வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி மிட்னாபூரில் பிரதமர் மோடியின் உரையைக் கேட்கச் சென்ற சிலர், நிகழ்ச்சியின் கூரைப்...

காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, வயதுமுதிர்ந்த சிறைக்கைதிகள் விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு

அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் சிறைகளில் இருக்கும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தண்டனைக் காலத்தில் பாதியை அவர்கள்...