​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீட்டின் படுக்கையறையில் இருந்த AC இயந்திரத்தினுள் புகுந்த பாம்பு..!

புதுச்சேரியில், வீட்டிலிருந்த ஏசி இயந்திரத்திற்குள் பாம்பு தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.யை போட்டுள்ளார். அப்போது, ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறாக சத்தம் வந்துள்ளது. மெக்கானிக்கை அழைத்து, ஏ.சி....

வனத்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மேற்குப் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார்...

நெல்லை மாவட்ட வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

நெல்லை மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வெயில் காரணமாக குற்றாலம் தெற்கு மலைப் பகுதிகளில் திடீரென காட்டுத் தீ பரவியது. இதனால் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும் குற்றாலம் வனப்பகுதியில்...

ஏரிக்குள் தவறி விழுந்து சிக்கித் தவித்த குட்டி யானை

அசாம் மாநிலத்தில், ஏரிக்குள் தவறி விழுந்த குட்டி யானை ஒன்று உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. அங்குள்ள கம்ரப் (Kamrup) எனும் மாவட்டத்தில் தனது தாயுடன் சென்ற குட்டி யானை ஒன்று, ரயில்வே கிராசிங்கை கடக்க முயற்சி செய்தபோது, அங்குள்ள ஏரி ஒன்றில் தவறி...

காட்டு யானை தாக்கியதில் கும்கி யானைக்கு பலத்த காயம்

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் கும்கி யானை ஒன்றுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள யானைகள் முகாமில் சேரன் மற்றும் ஜான் எனும் இரண்டு கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு...

புலித் தோல் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில், புலித்தோலை விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்கச் சென்ற மத்திய வனத்துறையினருக்கு கத்தி வெட்டு விழுந்தது. புலித்தோலை விற்பனை செய்யும் கும்பலை மத்திய வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்களை அணுகி புலித்தோலை 4 லட்சம் ரூபாய்க்கு வாங்க பேரம் பேசுவது...

வனப்பகுதியில் மான் வேட்டையாடியவர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். மாக்கம்பாளையம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றபோது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் சுற்றித்திரிவதை கண்டு பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் என்பதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புள்ளிமானை...

நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வனப்பரப்பில் தீ - பல்லாயிர ஏக்கரில் வன வளம் நாசம்

நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள வனப்பரப்பில் பற்றி எரியும் தீயால் பல்லாயிரம் ஏக்கரில் வன வளம் நாசமாகி உள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் காட்டுத் தீயை அணைக்க விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த பத்திப்பூர் வனப்பரப்பில் இரு...

கரும்பு சோகையைக் காட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பியை வெளியே அழைத்து வந்த வனத்துறை ஊழியர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர்.  கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் அட்டகாசம் செய்ததாக கூறி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி...

புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி  உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இங்கு மழைக்காலத்திற்கு முன்,...