​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் வங்கி ATM எந்திரத்தை உடைக்க முயன்ற நபர் இரண்டு நாட்களில் கைது

சென்னை நங்கநல்லூரில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற நபரை போலீசார் இரண்டு நாட்களில் கைது செய்துள்ளனர். நங்க நல்லூர் கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் எந்திரத்தை...

கோவையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் நவராத்திரி தேர்திருவிழா

நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்திருமலை எனப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி...

தேவாரம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றையானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

தேவாரம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றையானையை பிடிப்பதற்காக, 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில், கடந்த நான்கு மாதமாக ஒற்றை காட்டு யானை பயிர்கள், வீடுகளை நாசம் செய்து வருகிறது. இதையடுத்து அந்த யானையை விரட்ட...

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து ஒரு லட்சம்...

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்த நபர்கள், மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் வங்கிகளில் ஆய்வு

போலியான நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கடன் அளித்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையடுத்து மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ஆய்வு நடத்தியது. கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட கடன்களை ஆய்வு செய்த அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட...

நாளை கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்புச்செயலாளர்கள் உட்பட 26...

நுண்ணீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியம்

நுண்ணீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 45 கோடியே 71 லட்சம் ரூபாய் அளவுக்கு மானியம் வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்த நீரில் அதிக பாசனத்தை மேற்கொள்ளும் வகையில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் உள்ளிட்ட நுண்ணீர் பாசன முறையை...

கடன் கொடுப்பதற்கு படுக்கைக்கு வருமாறு கூறிய வங்கி மேலாளரை சரமாரியாகத் தாக்கிய பெண்

கடன் கொடுப்பதற்கு படுக்கைக்கு வருமாறு கூறிய வங்கி மேலாளரை கர்நாடகத்தில் பெண் சரமாரியாகத் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாவணகெரேயில் ((Davanagere)) வங்கிக் கடன் கேட்டு அணுகிய பெண்ணிடம் வங்கி மேலாளர் பாலியல் ரீதியாக இணங்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் வங்கி மேலாளரை...

பொருளாதாரக் குற்றமிழைத்து நாட்டைவிட்டு தப்பி ஓடிய ஒருவரை, தாயகம் கொண்டுவருவதில் முதல்முறையாக சிபிஐ வெற்றி

பொருளாதாரக் குற்றமிழைத்து நாட்டைவிட்டு தப்பி ஓடிய ஒருவரை, தாயகம் கொண்டுவருவதில் முதல்முறையாக சிபிஐ வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த முகமது யஹியா (Mohammad Yahya), 2003ஆம் ஆண்டில் 49 லட்ச ரூபாய் வரை வங்கிகளிடம் கடன்பெற்று திருப்பிக் கட்டாமல் ஏமாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டில்...

மன்னார்குடியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் பல மணி நேரம் வருமான வரி சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் 16 மணி நேரம் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.மனோகரன். அ.தி.மு.க. பிரமுகரான இவர், தமிழக அமைச்சர்...